இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2021
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம் 2021
மேற்கிந்தியத் தீவுகள்
இலங்கை
காலம்
3 மார்ச் – 2 ஏப்ரல் 2021
தலைவர்கள்
கீரோன் பொல்லார்ட் (ஒநாப, இ20ப)
திமுத் கருணாரத்ன (தேர்வுகள், ஒநாப) அஞ்செலோ மத்தியூஸ் (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு
2-ஆட்டத் தொடர் 0–0 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள்
கிரைக் பிராத்வெயிட் (237)
லகிரு திரிமான்ன (240)
அதிக வீழ்த்தல்கள்
கேமர் ரோச் (9)
சுரங்க லக்மால் (11)
தொடர் நாயகன்
சுரங்க லக்மால் (இல)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு
3-ஆட்டத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள்
சாயி கோப் (258)
தனுஷ்க குணதிலக்க (187)
அதிக வீழ்த்தல்கள்
யேசன் முகம்மது (6)
திசாரா பெரேரா (3)
தொடர் நாயகன்
சாயி கோப் (மேஇ)
இருபது20 தொடர்
முடிவு
3-ஆட்டத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள்
லென்டில் சிமன்சு (73)
பத்தும் நிசங்க (81)
அதிக வீழ்த்தல்கள்
ஓபெட் மெக்கோய் (4)
வனிந்து அசரங்கா (8)
இலங்கைத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் 2021 மார்ச் முதல் 2021 ஏப்ரல் வரை இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[ 1] [ 2] தேர்வுப் போட்டிகள் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாகவும்,[ 3] ஒருநாள் தொடர் 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் போட்டிகளின் ஒரு பகுதியாகவும் அமைந்தன.[ 4]
மேற்கிந்தியத் தீவுகள் அணி ப20இ போட்டித் தொடரை 2–1 என்ற கணக்கிலும்,[ 5] ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் வென்றது.[ 6] தேர்வுப் போட்டிகள் இரண்டும் வெற்றிதோல்வியில்லாமல் முடிவடைந்தது.[ 7]
அணிகள்
இ20ப தொடர்
1-வது இ20ப
மேற்கிந்தியத் தீவுகள் 4 இலக்குகளால் வெற்றி கூலிட்ச் துடுப்பாட்ட அரங்கம், அண்டிக்குவா நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), நைஜல் திகுயிடு (மேஇ) ஆட்ட நாயகன்: கீரோன் பொல்லார்ட் (மேஇ)
2-வது இ20ப
இலங்கை 43 ஓட்டங்களால் வெற்றி கூலிட்ச் துடுப்பாட்ட அரங்கம், அண்டிக்குவா நடுவர்கள்: நைஜல் திகுயிடு (மேஇ), லெசுலி ரைஃபர் (மேஇ) ஆட்ட நாயகன்: வனிந்து அசரங்கா (இல)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
3-வது இ20ப
மேற்கிந்தியத் தீவுகள் 3 இலக்குகளால் வெற்றி கூலிட்ச் துடுப்பாட்ட அரங்கம், அண்டிக்குவா நடுவர்கள்: பாட்ரிக் குசுட்டார்ட் (மேஇ), சோயல் வில்சன் (மேஇ) ஆட்ட நாயகன்: பேபியன் ஆலன் (மே.இ)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
ஒருநாள் தொடர்
1-வது ப.ஒ.நா
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அசென் பண்டார, பத்தும் நிசங்க (இல) இருவரும் தமது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
ஒருநாள் போட்டிகளில் தனுஷ்க குணதிலக்க களத்தில் இடையூறு விளைவித்தமைக்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட முதலாவது இலங்கையர்.[ 16]
சாய் கோப் (மேஇ) ஒருநாள் போட்டிகளில் தனது 10-வ்பது சதத்தைப் பெற்றார்.[ 17]
2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 10, இலங்கை 0.
2-வது ப.ஒ.நா
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 10, இலங்கை 0.
3-வது ப.ஒ.நா
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
ஆண்டர்சன் பிலிப்பு (மேஇ) தனது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தகுநிலைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 10, இலங்கை 0.
தேர்வுத் தொடர்
1-வது தேர்வு
எ
271 (103 நிறைவுகள்)
ரகுக்கீம் கோர்ன்வால் 61 (85)சுரங்க லக்மால் 5/47 (25 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
பத்தும் நிசங்க (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடி 100 ஓட்டங்களைப் பெற்ற நான்காவது இலங்கை வீரர் என்ற சாதனையை பத்தும் நிசங்க பெற்றார்.[ 18]
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 20, இலங்கை 20.
2-வது தேர்வு
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது மழை காரனமாக 42.1 பந்துப் பரிமாற்றங்களையே மேற்கொள்ள முடிந்தது.
கிரைக் பிராத்வெயிட் (மேஇ) தனது 4,000-வது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[ 19]
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 20, இலங்கை 20.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்