காட்மியம் பெர்மாங்கனேட்டு (Cadmium permanganate) என்பது Cd(MnO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். Cd(MnO4)2·6H2O என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஓர் அறுநீரேற்றாகவும் இது உருவாகிறது.
தயாரிப்பு
காட்மியம் சல்பேட்டுடன்பேரியம் பெர்மாங்கனேட்டை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் காட்மியம் பெர்மாங்கனேட்டை உருவாக்கலாம். பேரியம் சல்பேட்டு வீழ்படிவை அகற்றிய பிறகு, கரைசல் இருட்டில் படிகமாக்கப்படுகிறது.:[1]
காட்மியம் பெர்மாங்கனேட்டு அறுநீரேற்று 61~62 ° செல்சியசு வெப்பநிலையில் படிகமயமாக்கலின் போது நீரை இழக்கிறது. மேலும் 90 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது நீரிலியைப் பெறலாம். இந்நீரற்ற வடிவம் 108 °செல்சியசு வெப்பநிலையில் சிதையத் தொடங்குகிறது:[3]