பேரியம் பர்மாங்கனேட்டு
பேரியம் பர்மாங்கனேட்டு (Barium permanganate) என்பது BaMn2O8 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதியியல் சேர்மமாகும்[1]. தயாரிப்புஒரே நேரத்தில் நிகழும் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் காரணமாக மென்மையான அமிலக் கரைசலில் பேரியம் மாங்கனேட்டு விகிதச்சமமற்று பிரிவதால் பேரியம் பர்மாங்கனேட்டு தோன்றுகிறது[2]. வலிமையான ஆக்சிசனேற்றிகளைக் கொண்டு பேரியம் மாங்கனேட்டை ஆக்சிசனேற்றம் செய்தும் பேரியம் பர்மாங்கனேட்டை தயாரிக்கலாம். பேரியம் மாங்கனேட்டின் நீர்த்த கரைசலில்ல் செயல்முறை மெதுவாக நிகழ்வதன் காரணம் மாங்கனேட்டின் குறைவான கரையும் தன்மையைச் சார்ந்திருக்கிறது[2]. வினைகள்பேரியம் பர்மாங்கனேட்டு கரைசலுடன் நீர்த்த கந்தக அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் பர்மாங்கனிக் அமிலம் தயாரிக்க முடியும். கரைசலில் கரையாத உடன் விளை பொருளான பேரியம் சல்பேட்டு வடிகட்டல் முறையில் பிரிக்கப்படுகிறது[2].
வினையில் சேர்க்கப்படும் கந்தக அமிலம் கண்டிப்பாக நீர்த்த அமிலமாக இருக்க வேண்டும். அடர்த்தியான கந்தக அமிலத்துடன் பர்மாங்கனேட்டு வினை புரிந்தால் நீரிலியான மாங்கனீசு எப்டாக்சைடு உருவாகிவிடும். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia