சின்னப்பிள்ளைசின்னப்பிள்ளை இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயிடமிருந்து, மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் ” ஸ்திரீ சக்தி ”[1] எனும் உயர் விருது பெற்றவர். விருது வழங்கிய வாஜ்பாய், தன்னைவிட வயதில் இளையவரான சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்[2][3]. வாழ்க்கைக் குறிப்புசின்னப்பிள்ளை மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வாழ்கிறார். பன்னிரண்டு அகவையில் சின்னப்பிள்ளைக்கும் பில்லுசேரிப் பெருமாளுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. இரண்டு ஆண் குழுந்தைகள். கணவர் பெருமாள் தீராத நோயினால் வேலைக்குச் செல்ல முடியாது வீட்டிலேயே முடங்கி விட்டார். அதே காலத்தில் சின்னப்பிள்ளையின் தந்தையும் காலமானர். இதனால் சின்னப்பிள்ளை விவசாயக் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு உள்ளானார். இந் நிலையில்தான் இன்றளவும் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருப்பினும், கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார்[4][5]. சின்னப்பிள்ளையின் பெயர் தமிழக வரலாற்று பக்கங்களில் இடம் பெறத் தொடங்கியது. இளமைக்கால போராட்ட வாழ்க்கைநில உரிமையாளர்களைச் சந்தித்து, மொத்தமாக பத்து பதினைந்து ஏக்கர் விவசாய விளை நிலங்களில் விவசாய வேலையைக் குத்தகைக்கு எடுத்து, விவசாயக் கூலியாட்களை அணி திரட்டி, நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்ற பணிகள் செய்து, அதில் வரும் மொத்தக்கூலியை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டு வழங்கினார். முதியவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் தனது அணியில் சேர்த்து அவர்களுக்கும் வேளாண் வேலை வழங்கி கூலி வாங்கிக் கொடுத்தார். களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்சின்னப்பிள்ளை வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வளர்ந்து வரும் நேரத்தில், மதுரையில் செயல்படும் தானம் அறக்கட்டளையின் தலைவர் வாசிமலை தனது குழுவினருடன் பில்லுச்சேரி கிராமத்திற்கு சென்று, மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் குறித்து சின்னப்பிள்ளையிடம் விளக்கி கூறினார். அதன்படி தன் கிராமத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து, மகளிர் பொருளாதார முன்னேற்றத்திற்குக் காரணமாக விளங்கினார் சின்னப்பிள்ளை. சின்னப்பிள்ளை ஏற்படுத்திய மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம், கிராமக் கண்மாயில் மீன் பிடிக்கும் குத்தகையை, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுச் சாதனை படைத்தனர். 2004 இல் சுனாமி எனும் ஆழிப்பேரலை தமிழ்நாட்டை தாக்கியபோது சின்னப்பிள்ளை தலைமையில் சென்ற மீட்புப் பணியில் இருந்த மகளிர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. இந்தியப் பிரதமரின் ”ஸ்திரீ சக்தி விருதுடன்” கிடைத்த ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாயை மகளிர் சுய உதவிக்குழு தலைவிகளின் மருத்துவச் செலவிற்காக அறக்கட்டளை ஒன்று உருவாக்கி உள்ளார். கிராமப்புறத்தில் வழங்கி வந்த கந்து வட்டி முறையை, (நூறு ரூபாய் அசலுக்கு, ஒரு முட்டை நெல் வட்டி) மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒழித்துக் கட்டினார். ஆரம்ப காலத்தில் கிராமப்புறங்களில் மட்டுமே இயங்கி வந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள், தற்போது நகர்ப் புறங்களிலும் மகளிர் மேம்பாட்டிற்காக சிறப்பாக செயல்படுவதற்கு வித்திட்டவர் சின்னப்பிள்ளை. வகித்த பதவிகள்
பெற்ற விருதுகள்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia