செம்பூர்ணா
![]() ![]() ![]() செம்பூர்ணா என்பது (மலாய்: Semporna; ஆங்கிலம்: Semporna) மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவு, செம்பூர்ணா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது போர்னியோ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து இருந்தாலும், 1887 மே 10-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக நிறுவப் பட்டது. இந்த இடத்தின் பெயர் முதலில் தோங் ராலுன் (Tong Talun) என்று இருந்தது. பின்னரே செம்பூர்ணா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. செம்பூர்ணா என்றால் பஜாவு (Bajau) மொழியில் ஓய்வுக்கான இடம் (place of rest). என்று பொருள்.[1] புவியியல்செம்பூர்ணா நகரம், செம்பூர்ணா தீபகற்பத்தின் (Semporna Peninsula) முனையில், டார்வல் விரிகுடாவின் (Darvel Bay) தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தண்டுவோ (Tanduo) என்ற கிராமத்தில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்நகரப் பகுதிக்குச் சொந்தமாக 40-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றில் சிபாடான் தீவுகள் (Sipadan Island), மட்டாகிங், மாபுல், கப்பலாய் போன்ற பிரபலமான சுற்றுலாத் தீவுகளும் அடங்குகின்றன. செம்பூர்ணா நகரம், சிபாடான் தீவுக்குப் பயணிப்பதற்கான முக்கிய தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது.[2] மக்கள் தொகைசெம்பூர்ணாவின் மக்கள் தொகை 2010-இன் கணக்கெடுப்பின்படி 133,164. மொழி19 ஆம் நூற்றாண்டில் செம்பூர்ணா நிலப்பரப்பு பிலிப்பைன்ஸ் நாட்டை ஆட்சி செய்த ஸ்பானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், செம்பூர்ணாவில் இன்னும் சபகானோ எனும் ஸ்பானிய மொழி பேசப்படுகிறது. மலேசியாவில் உள்ள நகரங்களில் செம்பூர்ணாவில் மட்டுமே இம்மொழி பேசப்படுகிறது. பொருளாதாரம்இங்கு உள்ளூர் பொருளாதாரத்துக்கான வரவாக மீன்பிடித்தலும், சந்தைப்படுத்தலும் அமைந்துள்ளன. முத்து உற்பத்தி இங்கு பிரதான தொழிலாக உள்ளது. விமான நிலையம்செம்பூர்ணா விமான நிலையம் (Semporna Airport, IATA: SMM, ICAO: WBKA) செம்பூர்ணா நகர மையத்துக்கு அருகில் உள்ளது. இது 609 மீட்டர் ஓடுபாதையைக் கொண்ட ஒரு சிறிய விமான நிலையம். இங்கு உள்ளூர் விமானச் சேவைகள் மட்டுமே உள்ளன.[3] சுற்றுலா ஈர்ப்புகள்செம்பூர்ணா ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா ஈர்ப்புத் தளமாக உள்ளது. புகைப்படப் பிரியர்களுக்கும், கடலுணவு விரும்பிகளுக்கும் ஏதுவான இடமாகவும் உள்ளது. இங்கு டசின் கணக்கில் சிறிய பாரம்பரிய மீன்பிடிப்படகுகள் உள்ளன. ஆழ்கடல் நீர் மூழ்குவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகவும் உள்ளது. இங்கு குறிப்பிடத்தக்க பத்துக்கு மேற்பட்ட சுற்றுலா ஈர்ப்புத் தளங்கள் உள்ளன. துன் சக்காரான் கடற்பூங்காசெம்பூர்ணாவின் கடற்பூங்கா துன் சக்காரான் கடற்பூங்கா (Tun Sakaran Marinepark) என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இந்தக் கடற்பூங்கா 40-க்கும் மேற்பட்ட பல்வேறு பரப்பளவுகளைக் கொண்ட, குறிப்பிடத்தக்க தீவுகளை உள்ளடக்கியது. இந்தக் கவர்ச்சியான தீவுகள் உலகின் சிறந்த நீர்மூழ்கும் இடங்களில் ஒன்றென இயற்கைப் பாதுகாப்பு மையத்தினால் 2004-இல் பிரகடனப் படுத்தப்பட்டது.[4] துன் சக்காரான் அருங்காட்சியகம்துன் சக்காரான் அருங்காட்சியகம் (Tun Sakaran Museum) செம்பூர்ணா நகர மையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ரெகட்டா லேபா (Regatta Lepa)ரெகட்டா லேபா செம்பூர்ணாவின் பாரம்பரியப் படகுப் போட்டி. இது வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் வர்ணங்களால் அலங்கரிக்கபட்ட படகுகளில் நடைபெறும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia