a = 0.404 நானோமீட்டர், b = 0.395 நானோமீட்டர், மற்றும் c = 1.334 நானோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களைக் கொண்ட நேர்ச்சாய்சதுரப் படிக அமைப்பில் அடர் சாம்பல் நிற படிகங்களாக டிசிப்ரோசியம் இருசிலிசைடு உருவாக்குகிறது.[4]
வேதிப் பண்புகள்
டிசிப்ரோசியம் இருசிலிசைடு அதிக அரிப்பு எதிர்ப்பு சேர்மமாக வகைப்படுத்தப்படுகிறது. கொதிக்கும் நீரில் எட்டு மணி நேரம் வெளிப்படுத்தினால் மாதிரிகளின் எடை மற்றும் தோற்றத்தில் எந்த மாற்றமும் நிகழாது. 1000 °செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில் டிசிப்ரோசியம் இருசிலிசைடு காற்றில் மெதுவாக ஆக்சிசனேற்றம் அடைகிறது.
பயன்கள்
மேம்பட்ட மின்னணுவியல், காந்த சாதனங்கள் மற்றும் உயர் வெப்பநிலை பூச்சுகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு DySi2 ஒரு நம்பிக்கைக்குரிய பொருளாகும்.[5]