தாலியம்(III) முப்புளோரோ அசிட்டேட்டு
தாலியம்(III) முப்புளோரோ அசிட்டேட்டு (Thallium(III) trifluoroacetate) என்பது Tl(O2CCF3)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலியம்(III) டிரைபுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சில கரிமச் சேர்மங்களின் தயாரிப்பு செயல்முறைகளில் இது ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ வேதியியலில் தாலியம் நேரடியாகப் பயன்படும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருளாகும். இந்த சேர்மம் எக்சு-கதிர் படிகவியல் ஆய்வு மூலம் வகைப்படுத்தப்படவில்லை. எனவே மேலே காட்டப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் எளிமைப்படுத்தப்பட்டும் இருக்கலாம். கரிமத்தாலியம்(III) வழித்தோன்றல்களைப் பெறுவதற்கு தாலியம்(III) முப்புளோரோ அசிட்டேட்டு ஆனது அரீன்களுடன் நேரடியாக வினைபுரிகிறது. ஆல்க்கீன்களைச் செயலிழக்கச் செய்யவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, இந்த வினையாக்கியின் ஆல்ககால் கரைசல்கள் எளிய ஆல்க்கீன்களை கிளைக்கால் வழிப்பெறுதிகளாக மாற்றுகின்றன.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia