திகம்கர் மக்களவைத் தொகுதி (Tikamgarh Lok Sabha constituency) மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது [2]
திகம்கர் மக்களவைத் தொகுதி திகம்கர் மாவட்டம் மற்றும் நிவாரி மாவட்டம் மற்றும் சத்தர்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது. எல்லை நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, திகம்கர், ஜடாரா, நிவாரி, கார்காப்பூர், மகாராஜ்பூர், சத்தர்பூர் மற்றும் பிஜவர் சட்டமன்றத் தொகுதிகள் முந்தைய கஜுராகா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.
சட்டமன்றப் பிரிவுகள்
திகம்கர் மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை:[3]