திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்
திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீசர். இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற வேறு பெயரும் இருக்கிறது. தாயார் பெரியநாயகி.இச்சிவத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சத்தி முற்றம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 22ஆவது சிவத்தலமாகும். தல வரலாறுசக்திமுற்றத்தில் இருந்து அம்பிகை, ஈசனை நினைத்து தவம் இருந்தார். ஆனால் ஈசன் வராமல் காலம் தாழ்த்தினார். மனம் தளராமல் பக்தியையும், தவத்தையும் தீவிரப்படுத்தி ஒற்றைக் காலில் தவம் இருந்தார். அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன் ஜோதிசொரூபமாக காட்சி தந்தார். தன்முன் இருப்பது ஈசன் என்பதை உணர்ந்த அம்பிகை தீப்பிழம்பையே தழுவி ஆனந்தப்பட்டாள். ஒற்றை காலை கீழும், மற்றொரு காலை ஈசன்மீதும் வைத்து, இரு கரங்களால் ஈசனைத் தழுவி நிற்கும் தோற்றம் மூலவராக அமைந்தது. இந்த கோயிலில் வந்து வணங்கிச் சென்றால், திருமணம் கைகூடும். கோயில் அமைப்பு![]() பெரிய ராஜகோபுரத்தைக் கொண்டுள்ள இக்கோயிலின் கருவறையைச் சுற்றிலும் அருகிலுள்ள கோஷ்டத்திலும் விநாயகர், நடராஜர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலெட்சுமி, மூன்று லிங்க பானங்கள், மூன்று லிங்கங்கள் காணப்படுகின்றன. கருவறையின் வெளியே இடப்புறத்தில் லிங்கத்திருமேனியை தழுவிய அம்மன் காணப்படுகிறார். முன்மண்டபத்தில் அப்பர், ஞானசம்பந்தர், பைரவர், சந்திரன், சூரியன், நாகர்கள் உள்ளனர். பெரியநாயகி அம்மன் சன்னதி கோயிலின் இடப்புறம் அமைந்துள்ளது. தல சிறப்புகள்
திருத்தலப் பாடல்கள்
திருநாவுக்கரசர் பாடிய பதிகம் 096 திருச்சத்திமுற்றம்
இடம் (முற்றம்)
என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பர். சக்தி சிவனை வழிபட்ட இடம் (முற்றம்) என்னும் பொருளில் இக்கோயிலின் பெயர் அமைந்ததெனலாம்.[1] இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia