துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1996
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1996 (1996 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1996) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஆறாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியாகும். இப்போட்டி 1996 மார்ச் 17 ஆம் நாள் பாக்கித்தானின் கடாபி அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி மார்க் டெய்லர் தலைமையிலான ஆத்திரேலிய அணியை 7 இழப்புகளால் வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. நடுவர்கள்இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், தொலைக்காட்சி நடுவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சி. ஜே. மிச்சலேயும் பணியாற்றினர். சி. எச். லொயிட் ஆட்ட நடுவராகக் கடமையாற்றினார். அணிகள்இலங்கைஇலங்கை அணியின் தலைவராக அர்ஜூன றணதுங்கவும், துணைத் தலைவராக அரவிந்த டி சில்வாவும் ரொமேஷ் களுவிதாரண குச்சக்காப்பாளராகவும் பணியாற்றினர். இவர்களுடன் சனத் ஜயசூரிய, அசங்க குருசிங்க, எச். பி. திலகரத்ன, ரொஷான் மகாநாம, சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன், எச். டி. பி. கே. தர்மசேன, ஜி. பி. விக்கிரமசிங்க ஆகியோரும் அணியின் உறுப்பினர்களாக இருந்தனர். ஆஸ்திரேலியாஆஸ்திரேலிய அணியில் அணித்தலைவராக மார்க் டெய்லரும், குச்சக்காப்பாளராகஐ. ஏ. ஹீலியும் பணியாற்றினர். மார்க் வோ, ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வா, ஷேன் வோர்ன், எஸ். ஜி. லா, எம். ஜி. பெவன், பி. ஆர். ரீபெல், டி. டபிள்யூ. பிளெமிங், கிளென் மெக்ரா ஆகியோர் ஏனைய அணி உறுப்பினர்கள். ஆட்டம்
நாணயச் சுண்டலில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் மட்டையாடக் களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 நிறைவுகளில் 7 இழப்புகளுக்கு 241 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்துக் களமிறங்கிய இலங்கை அணி, 46.2 நிறைவுகளில் மூன்று இழப்புகளுக்கு 245 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாட்ட விபரம்ஆஸ்திரேலியா
இலங்கை
உசாத்துணைகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia