தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 2019 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மூன்று தேர்வுப் போட்டிகள் மற்றும் மூன்று இருபது20 பன்னாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடுகிறது. இந்தத் தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது. 2020 மார்ச் மாதத்தில் மீண்டும் இந்தியாவிற்கு வரும் தென்னாப்பிரிக்கா, மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடுகிறது.
அணிகள்
சுற்றுப்பயணத்திற்கு முன்பு, காயம் காரணமாக தென்னாப்பிரிக்கத் தேர்வு அணியில் இருந்து ரூடி செகண்ட் நீக்கப்பட்டு[4] அவருக்குப் பதிலாக எயின்ரிச் க்ளாசென் இடம்பெற்றார்.[5] தென்னாப்பிரிக்க இ20ப அணியில் இருந்து ஜே ஜே ஸ்மட்ஸ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜார்ஜ் லிண்டே இடம்பெற்றார். மூன்றாவது மற்றும் இறுதித் தேர்வுப் போட்டியில் காயம் காரணமாக கேஷவ் மகாராஜ் தென்னாப்பிரிக்க அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜார்ஜ் லிண்டேவும் இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு மாற்று வீரராக ஷாபாஸ் நதீமும் இடம்பெற்றனர்.
இ20ப தொடர்
1வது இ20ப
- நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை
- மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை
2வது இ20ப
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தெம்ப பவுமா, யோன் போர்ட்டுன், அன்ரிச் நோட்சி (தெஆ) ஆகிய மூவரும் தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.
- குவின்டன் டி கொக் முதல்முறையாக தென்னாப்பிரிக்க இ20ப அணியின் தலைவராக விளையாடினார்.[6]
3வது இ20ப
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
தேர்வுத் தொடர்
1வது தேர்வு
|
எ
|
|
502/7 அ (136 நிறைவுகள்) மாயங் அகர்வால் 215 (371) கேஷவ் மஹாராஜ் 3/189 (55 நிறைவுகள்)
|
|
|
323/4 அ (67 நிறைவுகள்) ரோகித் சர்மா 127 (149) கேஷவ் மஹாராஜ் 2/129 (22 நிறைவுகள்)
|
|
191 (63.5 நிறைவுகள்) டேன் பியடிட் 56 (107) முகம்மது சமி 5/35 (10.5 நிறைவுகள்)
|
- நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக முதல் நாளின் தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் நடைபெறவில்லை.
- செனூரன் முத்துசாமி (தெஆ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- மாயங் அகர்வால் (இந்.) தனது முதல் நூறு மற்றும் இருநூறைப் பெற்றார்.[7][8]
- ரவீந்திர ஜடேஜா (இந்.) தேர்வுப் போட்டிகளில் தனது 200வது மட்டையாளரை வீழ்த்தினார்.[9]
- ரவிச்சந்திரன் அசுவின் (இந்.) தேர்வுப் போட்டிகளில் 350 மட்டையாளர்களை அதிவிரைவாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற முத்தையா முரளிதரனின் சாதனையைச் சமன் செய்தார்.[10]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0.
2வது தேர்வு
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றிமகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே நடுவர்கள்: கிறிஸ் காஃபனி (நியூ.), நைஜல் லாங் (இங்.) ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்.)
|
- நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- அன்ரிச் நோர்ட்ஜே (தெஆ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- கேஷவ் மஹாராஜ் (தெஆ.) தனது 100வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[11]
- விராட் கோலி இந்திய அணித்தலைவராக தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்...[12]
- விராட் கோலி தனது தேர்வுப் போட்டிகளில் 7,000 ஓட்டங்களைக் கடந்தார். மேலும் 7 முறை இருநூறு அடித்த முதல் இந்திய மட்டையாளர் என்ற சாதனையைப் படைத்தார்.[13][14]
- இப்போட்டியின் முடிவு மூலம் இந்திய அணி விடுதலைக் கோப்பையை வென்றது.[15]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0.
3வது தேர்வு
|
எ
|
|
497/9 அ (116.3 நிறைவுகள்) ரோகித் சர்மா 212 (255) சார்ச் லின்டி 4/133 (31 நிறைவுகள்)
|
|
162 (56.2 நிறைவுகள்) சுபைர் அம்சா 62 (79) உமேஸ் யாதவ் 3/40 (9 நிறைவுகள்)
|
|
|
|
- நானயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- தகுந்த வெளிச்சமின்மையால் முதல் நாளில் 32 நிறைவுகளும் இரண்டாம் நாளில் 34 நிறைவுகளும் விளையாடப்படவில்லை.
- சாபாசு நதீம் (இந்), ஐன்ரிச் கிளாசன் (தெஆ), சியார்ச் லின்டி (தெஆ) ஆகியோர் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- ரோகித் சர்மா (இந்), தேர்வுப் போட்டிகளில் தனது 2,000வது ஓட்டத்தையும், முதலாவது இருநூறையும் பெற்றார்.[16][17]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0.
ஒருநாள் தொடர்
1வது ஒருநாள்
2வது ஒருநாள்
ஏகனா பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், இலக்னோ
|
3வது ஒருநாள்
மேற்கோள்கள்