வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும். இது மானிப்பாய் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இது வடக்கில் வங்காள விரிகுடாவையும், வட கிழக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையையும், கிழக்கில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையையும், தென் கிழக்கில் நல்லூர் பிரதேச சபையையும், தெற்கில் யாழ்ப்பாண மாநகர சபையையும், தென் மேற்கில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியையும், மேற்கில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் எல்லைகளாகக் கொண்டு ஒரு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 55 சதுர கிலோ மீட்டர்களாகும். இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு 17 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 11 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 28 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] வட்டாரங்கள்26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் கீழ் வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]
தேர்தல் முடிவுகள்2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்1998 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலின் பின் நாட்டின் போர்ச்சூழலால் உள்ளூராட்சித்தேர்தல்கள் இடம்பெறவில்லை. பின்னர் மார்ச் 2011 இல் தேர்தல் நடைபெறுமென தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆயினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேர்தல் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அக்கட்சி நீதிமன்றில் வழக்கு தொடுத்தது. இதனால் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அக்கட்சியின் வேட்புமனுக்கள் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 2011 சூலை 23 அன்று தேர்தல்கள் இடம்பெற்றது. இதன் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.
இதன்படி இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அ. ஜெபநேசன் பிரதேச சபைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற கிராம சேவகர் ச. சிவகுமாரன் உதவித் தலைவராகவும் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தெரிவு 30.07.2011 அன்று இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2018 உள்ளூராட்சித் தேர்தல்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 17 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 11 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 28 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
2018 தேர்தலில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தலைவராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் (மானிப்பாய் தென்கிழக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக சின்னையா கணேசவேல் (உயரப்புலம், இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3] 2025 உள்ளாட்சித் தேர்தல்2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4] 17 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 11 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 28 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 தேர்தலில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தலைவராக கந்தையா யசீதன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக பேரின்பநாயகம் சுபாகர் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia