வலிகாமம் தெற்கு பிரதேச சபை

வலிகாமம் தெற்கு பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
திராகராசா பிரகாஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி
19 சூன் 2025 முதல்
பிரதித் தலைவர்
செல்வரத்தினம் உதயகுமாரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி
19 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்31
அரசியல் குழுக்கள்
அரசு (13)

எதிர் (18)

ஆட்சிக்காலம்
4 ஆண்டுகள்
தேர்தல்கள்
கலப்பு முறைத் தேர்தல்
அண்மைய தேர்தல்
6 மே 2025

வலிகாமம் தெற்கு பிரதேச சபை (Valikamam South Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 55.24 சதுர மைல்கள். இதன் வடக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையும்; கிழக்கில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையும்; தெற்கில் நல்லூர் பிரதேச சபையும்; மேற்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு 18 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கீழ் வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3] வலிகாமம் தெற்கு பிரதேச சபைப் பகுதி 22 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 ஏழாலை வடகிழக்கு J204 ஏழாலை கிழக்கு (பகுதி)
J205 ஏழாலை வடக்கு
2 ஏழாலை மேற்கு J201 ஏழாலை மேற்கு
J202 ஏழாலை தென்மேற்கு (பகுதி)
3 ஏழாலை மத்தி J204 ஏழாலை கிழக்கு (பகுதி)
J206 ஏழாலை மத்தி
4 குப்பிளான் J210 குப்பிளான் தெற்கு
J211 குப்பிளான் வடக்கு
5 புன்னாலைக்கட்டுவன் J207 புன்னாலைக்கட்டுவன் தெற்கு
J208 புன்னாலைக்கட்டுவன் வடக்கு
6 ஏழாலை தெற்கு J203 ஏழாலை தெற்கு (பகுதி)
7 சுன்னாகம் கிழக்கு J195 சுன்னாகம் நகரம் வடக்கு
J197 சுன்னாகம் நகரம் கிழக்கு
8 சுன்னாகம் மேற்கு J198 சுன்னாகம் நகரம் மத்தி
J199 சுன்னாகம் நகரம் மேற்கு
9 கந்தரோடை J186 உடுவில் வடக்கு (பகுதி)
J200 கந்தரோடை
10 சங்குவேலி J187 சங்குவேலி
11 உடுவில் வடக்கு J185 உடுவில் மத்தி வடக்கு
J186 உடுவில் வடக்கு (பகுதி)
12 சுன்னாகம் தெற்கு J196 சுன்னாகம் நகரம் தெற்கு
13 இணுவில் கிழக்கு J189 இணுவில் கிழக்கு
J190 இணுவில் வடகிழக்கு
14 உடுவில் தெற்கு J182 உடுவில் தென்மேற்கு
J184 உடுவில் மத்தி (பகுதி)
15 உடுவில் தென்கிழக்கு J183 உடுவில் தென்கிழக்கு
J184 உடுவில் மத்தி (பகுதி)
16 இணுவில் மேற்கு J188 இணுவில் தென்மேற்கு
J191 இணுவில் மேற்கு
17 தாவடி வடக்கு J193 தாவடி கிழக்கு
J194 தாவடி வடக்கு
18 தாவடி தெற்கு J192 தாவடி தெற்கு

தேர்தல் முடிவுகள்

1998 உள்ளூராட்சித் தேர்தல்

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,542 45.31% 8
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 2,659 34.01% 5
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 1,121 14.34% 2
  தமிழீழ விடுதலை இயக்கம் 496 6.34% 1
செல்லுபடியான வாக்குகள் 7,818 100.00% 16
செல்லாத வாக்குகள் 939
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,757
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 41,444
வாக்குவீதம் 21.13%

2011 உள்ளாட்சித் தேர்தல்கள்

23 யூலை 2011 உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 12,895 74.29% 13
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 4,027 23.20% 3
  ஐக்கிய தேசியக் கட்சி 435 2.51% 0
செல்லுபடியான வாக்குகள் 17,357 100.00% 16
செல்லாத வாக்குகள் 1,674
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 19,031
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 32,857
வாக்குவீதம் 57.92%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 18 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 12 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 8,963 35.77% 11 0 11
  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5,401 21.55% 3 3 6
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,295 13.15% 1 3 4
  இலங்கை சுதந்திரக் கட்சி 2,990 11.93% 1 3 4
  ஐக்கிய தேசியக் கட்சி 2,775 11.07% 2 1 3
  தமிழர் விடுதலைக் கூட்டணி** 1,447 5.77% 0 2 2
  இலங்கை பொதுசன முன்னணி 188 0.75% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 25,059 100.00% 18 12 30
செல்லாத வாக்குகள் 405
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 25,464
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 37,086
வாக்குவீதம் 68.66%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 தேர்தலில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைவராக கருணாகரன் தர்சன் (சுன்னாகம் கிழக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக இராசையா பரமேஸ்வரலிங்கம் (தாவடி தெற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளாட்சித் தேர்தல்

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7] 18 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 9,216 39.43% 13 0 13
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 5,171 22.12% 2 4 6
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 4,471 19.13% 3 3 6
  தேசிய மக்கள் சக்தி 3,956 16.92% 0 5 5
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 560 2.40% 0 1 1
செல்லுபடியான வாக்குகள் 23,374 100.00% 18 13 31
செல்லாத வாக்குகள் 379
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 23,753
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 40,408
வாக்குவீதம் 58.78%

2025 தேர்தலில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைவராக தியாகராசா பிரகாஷ் (ஏழாலை வடகிழக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக செல்வரத்தினம் உதயகுமாரன் (இணுவில் கிழக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[8]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  5. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 24 மார்ச் 2017. 
  6. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  7. "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Valikamam South Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 28 May 2025. Retrieved 28 May 2025.
  8. "வலி.தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு". தமிழ்வின். Archived from the original on 22 சூன் 2025. Retrieved 22 சூன் 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya