வலிகாமம் வடக்கு பிரதேச சபை
வலிகாமம் வடக்கு பிரதேச சபை (Valikamam North Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 61.25 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையும்; தெற்கில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையும்; மேற்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 14 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 35 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] வட்டாரங்கள்26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 21 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கீழ் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3] இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[4]
தேர்தல் முடிவுகள்1998 உள்ளூராட்சித் தேர்தல்29 சனவர் 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5][6]
2011 உள்ளூராட்சித் தேர்தல்23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7]
2018 உள்ளூராட்சித் தேர்தல்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 21 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 18 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 39 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைவராக சோமசுந்தரம் சுகிர்தன் (மல்லாகம், இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக பொன்னம்பலம் இராசேந்திரம் (இளவாலை வடமேற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3] 2025 உள்ளூராட்சித் தேர்தல்2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[8] 21 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 14 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 35 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வலி வடக்கு பிரதேச சபையின் தலைவராக சோமசுந்தரம் சுகிர்தன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக பொன்னுத்துரை தங்கராசா (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia