இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
இக் கட்டுரை வாசிப்போருக்கு தெளிவற்று அல்லது குழப்பமாக உள்ளது. தயவுசெய்து இதனை தெளிவாக எழுத உதவுங்கள்; பேச்சுப்பக்கத்தில் கருத்துக்கள் காணப்படலாம்.(அக்டோபர் 2016)
விவிலியத் திருமுறை நூல்கள் (Canonical Books) எனப்படும் நூல்கள், பொதுவாக அனைத்து கிறிஸ்தவ சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் விவிலிய நூல்கள் ஆகும். பழைய ஏற்பாட்டின் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டின் 27 நூல்களும் திருமுறை நூல்களின் பட்டியலில் இடம்பெறுகின்றன.
திருமுறை நூல்கள்
யூதர்களின் எபிரேய விவிலியத்தின் 39 நூல்களும் பழைய ஏற்பாட்டின்திருமுறை நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் இறைஏவுதல் பற்றி எந்த கிறிஸ்தவ சபையும் பொதுவாக சந்தேகம் கொள்வதில்லை. இவற்றில் திருச்சட்ட நூல்கள், வரலாற்று நூல்கள், இறைவாக்கு நூல்கள் மற்றும் ஞான நூல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இவற்றைத் தவிர்த்து, சில பாரம்பரிய திருச்சபையினரால் மட்டும் ஏற்கப்படும் கிரேக்க மரபில் தோன்றிய சில பழைய ஏற்பாட்டு நூல்கள், இணைத் திருமுறை நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை ஏழு கிரேக்க மரபு நூல்களும், இரண்டு எபிரேய மரபு நூல்களின் கிரேக்க இணைப்பு பகுதிகளும் இணைத் திருமுறையாக கருதப்படுகின்றன.
புதிய ஏற்பாட்டைப் பொறுத்த அளவில், தொடக்க காலம் முதலே கத்தோலிக்க திருச்சபையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள 27 நூல்களும் பொதுவாக அனைத்து சபையினராலும் திருமுறை நூல்களாக ஏற்கப்படுகின்றன. இவற்றில் நற்செய்தி நூல்கள், தொடக்க திருச்சபையின் வரலாறு, கிறிஸ்தவ நம்பிக்கை பற்றிய திருமுகங்கள் மற்றும் திருவெளிப்பாடு நூல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பழைய ஏற்பாடு
பழைய ஏற்பாட்டின் திருமுறை நூல்கள் பின்வருமாறு:
ஆகமங்கள் (அல்லது) திருச்சட்ட நூல்கள் (அல்லது) ஐந்நூல்கள்: