1837-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பிரின்ஸ்செப் என்பவரால் தோப்ரா தூண் கல்வெட்டுக் குறிப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.[2]
அசோகரின் இக்கல்வெட்டுத் தூணை கிபி 1356-ஆண்டில் தில்லி சுல்தான்பெரேஸ் ஷா துக்ளக் என்பவரால் துண்டுகளாக உடைக்கப்பட்டு, தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா பகுதியில் இருந்த மசூதியில் மினார்கள் நிறுவ எடுத்துச் செல்லப்பட்டது. [3]1857-இல் சிப்பாய்க் கிளர்ச்சி முடிவுற்ற போத் இராஜா இந்து இராவ் என்பவர் உடைக்கப்பட்ட இக்கல்வெட்டுத் தூணின் துண்டுகளை ஒன்று சேர்த்து சீரமைத்தார்.
கல்வெட்டின் மொழிபெயர்ப்பு
கிமு 3-ஆம் நூற்றாண்டின் அசோகர் நிறுவிய இத்தூண் கல்வெட்டில், அசோகரின் வேறு பெயர்களான தேவனாம்பிரிய (தேவர்களுக்கு பிரியமானவன்) மற்றும் பியதாசி எனும் பெயர்கள் பிராமி எழுத்தில்பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டில் அசோகரின் கொள்கைகளை விவரிப்பதுடன பௌத்த தர்ம நெறிகளை கடைப்பிடித்தல் (நியாயமான, நல்லொழுக்கமான வாழ்க்கை), தார்மீக விதிகள் மற்றும் சுதந்திரம் போன்ற விஷயங்களில் மௌரியப் பேரரசின் மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் வேண்டுகோள் விடுக்கிறது. தோப்ரா கலான் தூண் கல்வெட்டுக் குறிப்புகளை ஜேம்ஸ் பிரின்செப் என்பவர் 1837-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சில பகுதிகள் பின்வருமாறு:[4]
உயரமான சாலைகளில், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு நிழலாக இருக்கும் வகையில் அத்தி மரங்களை நடச் செய்தேன்.
...மேலும், இவர்களும் மற்றவர்களும் புனிதமான செயல்களில் மிகவும் திறமையாகவும், விவேகமாகவும், மரியாதையுடனும் நடந்து, குழந்தைகளின் இதயத்திலும் கண்களிலும், தர்மத்திலும் (பௌத்த சமயத்தில்) உற்சாகம் மற்றும் போதனைகளை வழங்குவதற்கான நோக்கங்களுக்காக பயன்படுத்தட்டும்.
நான் செய்த நன்மையான செயல்கள் யாவும், என்னைப் பின்தொடரும் மக்களுக்குக் கடமைகளாக விதிக்கப்படுகிறது. மேலும் அவர்களின் செல்வாக்கு அதிகரித்து வெளிப்படும் - தந்தை மற்றும் தாய்க்கு சேவை செய்வதன் மூலம், ஆன்மீக போதகர்களுக்கு சேவை செய்வதன் மூலம், வயது முதிர்ந்தவர்களிடம் மரியாதையான நடத்தையாலும், கற்றறிந்தவர்களிடம் கருணை காட்டுவதன் மூலமும், அனாதைகள் மற்றும் ஆதரவற்றோர் மற்றும் வேலையாட்கள் மற்றும் சிறிய பழங்குடியினரிடம் அன்பு காட்ட வேண்டும்.
மதம் இரண்டு தனித்தனி செயல்முறைகளால் மனிதர்களிடையே செல்வாக்கு செலுத்துகிறது - மத நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பு. (...) மேலும் அந்த மதம் மனிதர்களின் துன்புறுத்தலில் இருந்து விடுபடலாம், அது (எந்தவொரு) உயிரினத்தையும் மரணத்திற்கு உட்படுத்துவது அல்லது சுவாசத்தை இழுக்கும் எதையும் தியாகம் செய்வது போன்ற முழுமையான தடையின் மூலம் உயிர்வதை தடுக்கலாம். சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை - என் மகன்கள் மற்றும் மகன்களின் மகன்களுக்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற ஒரு கல்வெட்டு செய்யப்படுகிறது.
இந்த கல் தூண்கள், இந்த தர்மத்தின் (மத) ஆணை அதில் பொறிக்கப்பட்டுள்ளது, அது நீண்ட யுகங்கள் வரை நிலைத்திருக்கும்.
தோப்ரா அசோகர் கல்வெட்டு மற்றும் பூங்கா அருங்காட்சியகம்