தக்கோலம்
தக்கோலம் (ஆங்கிலம்:Thakkolam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் புராதனப் பெயர் திருஊறல் என்பதாகும். திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது. அமைவிடம்வேலூர் நகரத்திலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம், 14 கி.மீ. தொலைவில் உள்ள அரக்கோணம் ஆகும். இதன் கிழக்கில் திருவள்ளூர் 29 கி.மீ.; மேற்கில் வேலூர் 75 கி.மீ.; வடக்கில் காஞ்சிபுரம் 29 கி.மீ.; தெற்கில் அரக்கோணம் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு8.50 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,321 வீடுகளும், 13,983 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.69% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள் வீதம் உள்ளனர்.[4] மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia