கலவை (இராணிப்பேட்டை மாவட்டம்)
கலவை (ஆங்கிலம்:Kalavai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கலவை நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்கலவை, காஞ்சிபுரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து 43 கி.மீ. தொலைவிலும், ஆரணியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், ஆற்காட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், இராணிப்பேட்டையிலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு4 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 53 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[1] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,343 வீடுகளும், 9,773 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.64% என்பதாகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1040 பெண்கள் என்றுள்ளது.[2] கலவை சங்கர மடம்கலவை காஞ்சி சங்கர மடத்தின் கிளையில், 66 & 67-வது ஆச்சாரியர்களின் சமாதிகள் உள்ளது. சந்திரசேகர சரசுவதிகள், கலவையில் துறவற தீட்சை எடுத்துக் கொண்டு, காஞ்சி சங்கர மடத்தின் 68-வது ஆச்சாரியாராகப் பொறுப்பேற்றார்.[3] கலவை பேரூந்து நிலையம் அருகே, சங்கர மடத்தின் சார்பில் முதியோர் இல்லம் மற்றும் உடல் ஊனமுற்றோர் இல்லம் இயங்கி வருகிறது. புவியியல்இவ்வூரின் அமைவிடம் 12°46′N 79°25′E / 12.77°N 79.42°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 138 மீட்டர் (452 அடி) உயரத்தில் இருக்கின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia