விளாப்பாக்கம்
விளப்பாக்கம் (ஆங்கிலம்:Vilapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்விளப்பாக்கம் பேரூராட்சி வேலூருக்கு கிழக்கில் 28 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் கலவை 18 கி.மீ.; வடக்கில் ஆற்காடு 8 கி.மீ.; தெற்கில் திமிரி 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 25 கி.மீ. தொலைவில் உள்ள அம்மூர் ஆகும். பேரூராட்சியின் அமைப்பு5 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 59 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,941 வீடுகளும், 8,174 மக்கள்தொகையும், கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.36%, பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia