பனப்பாக்கம்
பனப்பாக்கம் (ஆங்கிலம்:Panapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்பனப்பாக்கம் பேரூராட்சி வேலூரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 11 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளுரில் உள்ளது. இதனருகே உள்ள நகரங்கள், கிழக்கே காஞ்சிபுரம் 23 கி.மீ.; மேற்கே வாலாசாபேட்டை 18 கி.மீ.; வடக்கே அரக்கோணம் 23 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு6.5 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,802 வீடுகளும், 11,536 மக்கள்தொகையும், கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.50%, பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1017 பெண்கள் வீதம் உள்ளனர்.[4] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 12°55′N 79°35′E / 12.92°N 79.58°E ஆகும்.[5] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 110 மீட்டர் (360 அடி) உயரத்தில் இருக்கின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia