அவலாஞ்சி ஏரி
அவலாஞ்சி ஏரி (Avalanche Lake) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஏரியாகும்.[1][2] சொற்பிறப்புஇந்த ஏரி உள்ளபகுதியில் 1800 களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனிச்சரிவு என்னும் பொருளுள்ள அவலாஞ்சி (avalanche) என்ற பெயர் உண்டானது.[1] சுற்றுலா![]() நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.[3] ஏரியைச் சுற்றிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ள நிலப்பகுதியில் மக்னோலியசு, மல்லிகை, ரோடோடென்றான் எனப்படும் கொத்துக் கொத்தான மலர்கள் அழகாகப் பூத்துக்குலுங்குகின்றன.ஏரிக்கு அருகில் அதைச் சுற்றியுள்ள உள்ள பாதையில் சுற்றுலாப்பயணிகள் மெல்லிய காற்றின் துணையுடன் பயணிக்க முடியும்[1]. ஏரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மீன்பிடிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.[4]. ஏரிக்கு அருகே உள்ள மீன் குஞ்சு பொரிப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் தேவையான மீன்பிடிக்கும் தூண்டில்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றைப் பெற்று தாங்கே தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம்.[5] . ஏரியின் அருகில் சுற்றுலாப்பயணிகள் கூடாரங்களை அமைத்தும் தங்குகின்றனர் . ஏரிக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் மலையேறுவதும், ஏரியில் படகுச் சவாரி மேற்கொள்ளுவதும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இதர பொழுதுபோக்குகளாகும். [6] மேல் பவானி எனப்படும் பகுதி இத்தகைய மலையேற்றங்களுக்கு உகந்ததாகும். இங்கு அடர்த்தியான காடுகளும் வனவிலங்குகளும் உள்ளன[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia