வீராணம் ஏரி

வீராணம் ஏரி (வீரநாராயண ஏரி)
வீராணம் ஏரி
அமைவிடம்லால்பேட்டை, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°20′10″N 79°32′40″E / 11.33611°N 79.54444°E / 11.33611; 79.54444
ஏரி வகைநீர் தேக்கம்
முதன்மை வரத்துவடவாறு
வடிநிலப் பரப்பு25 km2 (9.7 sq mi)
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்11.2 km (7.0 mi)
அதிகபட்ச அகலம்4 km (2.5 mi)
மேற்பரப்பளவு44.8 ச.கி.மீ.
அதிகபட்ச ஆழம்47.5 அடி
நீர்க் கனவளவு1,465 மில்லியன் கன அடி

வீராணம் ஏரி தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டம் லால்பேட்டை முதல் தொடங்கி சேத்தியாதோப்பு அருகில் உள்ள பூதங்குடி கிராமத்தில் முடிவடைந்து இதனுடைய உதிரி நீரானது சேத்தியாதோப்பில் செல்லும் வெள்ளாற்றில் கலக்கின்றது. இதன் அருகில் உள்ள நகரம் சேத்தியாத்தோப்பு 2 கி.மீ. வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. இது கி.பி. 907 முதல் 953 வரை சோழர்கள் காலத்தில் வெட்டிய ஏரியாகும். இந்த ஏரி இராஜாதித்ய சோழன் என்னும் இளவரசரால் வெட்டப்பட்டது. இராஜாதித்ய சோழன் தந்தையான முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீரநாராயணன் ஆகும். இப்பெயரே வீரநாராயணன் ஏரி என அழைக்கப்பட்டது, கால போக்கில் இப்பெயர் வீராணம் ஏரி என அழைக்கப்பட்டது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும். [1]. இதன் கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி (1.46Tmc) ஆகும்.

வீராணம் ஏரி

காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது.

வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வேரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர 1968-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004-இல் நிறைவடைந்தது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் இவ்வேரியின் கரையில் இருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 47.5 அடி ஆகும்.

உசாத்துணை

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya