பேரிஜம் ஏரி
பேரிஜம் ஏரி (Berijam Lake), தமிழ்நாட்டின், கொடைக்கானல், மோயர்முனைப் பகுதியிலிருந்து 18 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 24 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பேரிஜம் ஏரியின் தண்ணீர், தேனி மாவட்டம், பெரியகுளம் மக்களின் குடிநீராகப் பயன்படுகிறது. பேரிஜம் ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியில் 2ஆவது இடத்தை பெற்றுள்ளது. பேரிஜம் செல்லும் வழியில் உள்ள மதிக்கெட்டான் சோலையில், வனத்துறையின் அனுமதியுடன் மலையேறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பகுதி அதிகமான மூலிகைச் செடிகளும், சிறுத்தை, செந்நாய், காட்டு மாடு, மலைப் பன்றி, மான், காட்டுக் கோழி போன்ற காட்டு உயிரினங்களும் கொண்டது. [1] போக்குவரத்து வசதிகள்கொடைக்கானல், மோயர் பாயிண்டிலிருந்து பாம்பார்புரம் கூட்டு வன மேலாண்மை குழு சார்பில் சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது. தனியார் வாகனங்களுக்கு, கொடைக்கானல் வன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தவிர அனைத்து நாள்களிலும் காலை 8.30 முதல் 9 மணி வரை முப்பது நிமிடங்கள் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia