பைக்காரா ஆறு![]() பைக்காரா ஆறு உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும்[1] இந்த ஆற்றின் பைக்காரா அருவி 55மீ மற்றும் 61மீ உயரத்திலிருந்து கொட்டும் தொடரருவியாக சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. பைக்காரா நீர்பிடிப்பு பகுதிகளும், சுற்றுலா படகு நிலையங்களும், தோடர் இன பழங்குடியினரின் குடியிருப்புகளும் பைக்காரா அணையைச் சுற்றியுள்ளன. உதகமண்டலத்திலிருந்து 21 கி.மீ தொலைவில் பைக்காரா அணை அமைந்துள்ளது. புனல் மின் நிலையம்பிரித்தானியர் ஆட்சியின் போது சர் சி.பி. ராமசாமி ஐயர் முயற்சியால் 1920கள் மற்றும் 1930களில் பைக்காரா திட்டம் போடப்பட்டு 1932 அக்டோபரில் 6.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியுடன் செயல்படத் தொடங்கி இன்று வரை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள பழமையான மின் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] ஹெச்.ஜி.ஹாவர்ட் என்ற பொறியாளரின் தலைமையில் மின்சாரத்துறை செயல்படத் தொடங்கியது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia