கொடைக்கானல் ஏரி
கொடைக்கானல் ஏரி (Kodaikanal Lake), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில், கொடைக்கானல் நகரத்தின் மையத்தில் 24 ஹெக்டரில் அமைந்த செயற்கை ஏரியாகும்.[1] 1863இல் மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆங்கிலேயேர் சர் ஹென்றி லெவிங்கெ என்பவர் கொடைக்கானல் ஏரி நிறுவ காரணமானவர்.[2] கொடைக்கானல் ஏரி படகு சவாரி செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடமாகும்.[3] மிதிவண்டிப் பயிற்சியாளர்கள் மற்றும் குதிரை ஏற்றப் பயிற்சியாளர்களுக்கு கொடைக்கானல் ஏரியின் சுற்றுச்சாலைகள் சிறப்பிடமாக உள்ளது. தற்போது ஏரியின் நீர் மிகவும் மாசு அடைந்திருப்பதாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.[4] போக்குவரத்து வசதிகள்சென்னையிலிருந்து மதுரை வழியாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் கொடை ரோடு சந்திப்பில் நின்று செல்லும். கொடை ரோட்டிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த கொடைக்கானல் செல்ல மகிழுந்து வசதிகள் உண்டு.[5] மதுரை, திண்டுக்கல், தேனி, வத்தலகுண்டு, திருச்சி மற்றும் பழனியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.[2] இதனையும் காண்கபடக்காட்சிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia