பெருமாள் ஏரி

பெருமாள் ஏரி
இந்தியாவில் பெருமாள் ஏரி அமைவிடம்
இந்தியாவில் பெருமாள் ஏரி அமைவிடம்
பெருமாள் ஏரி
அமைவிடம்கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°34′N 79°41′E / 11.567°N 79.683°E / 11.567; 79.683
வகைஏரி

பெருமாள் ஏரி (Perumal Eri) என்பது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். குறிஞ்சிப்பாடியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பெருமாள் ஏரி அமைந்துள்ளது.

கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் பெருமாள் ஏரி அமைந்துள்ளது. இது 10ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக (சுந்தர) சோழன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. இதன் நீளம் 16 கிலோ மீட்டர்ரும் அகலம் 1 கிலோ மீட்டரும் ஆகும். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் கழிவுகளால் 8 கிலோ மீட்டர் தூரம் ஏரி தூர்ந்து விட்டது. தமிழக அரசு கடலூர் சிப்காட்டில் புதிதாக அமைத்து வரும் 3000 கோடி ரூபாய் திட்டமான நாகார்ஜுனா ரிபைனரீஸ் என்ற ஆந்திரா நிறுவனத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பெருமாள் ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது[1]. மேலும் அந்த ஏரியில் ராட்சச ஆழ் குழாய் மூலமும் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. கடலூர் செய்தி தளத்திலிருந்து
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya