நியோடிமியம்(III) கார்பனேட்டு
நியோடிமியம்(III) கார்பனேட்டு (Neodymium(III) carbonate) என்பது Nd2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த உப்பில் நியோடிமியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் கார்பனேட்டு -2 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகிறது. நீரற்ற வடிவம் ஊதா-சிவப்பு நிறத்திலும்[1] எண்ணிரேற்று இளஞ்சிவப்பு நிறத்தில் திண்மநிலையிலும் காணப்படுகிறது.[2] இந்த இரண்டு உப்புகளும் தண்ணீரில் கரைவதில்லை.[3] தயாரிப்புநியோடிமியம்(III) ஐதராக்சைடும் கார்பன் டை ஆக்சைடும் சேர்ந்து வினைபுரிவதால் நியோடிமியம்(III) கார்பனேட்டு உருவாகும்.
அனிலினில் உள்ள நியோடிமியம்(III) குளோரைடு கரைசல் வழியாக அழுத்தத்தின் கீழ் கார்பனீராக்சைடை செலுத்துவதன் மூலமும் நியோடிமியம்(III) கார்பனேட்டை தயாரிக்க முடியும். :
நியோடிமியம்(III) குளோரோ அசிட்டேட்டை நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தியும் நியோடிமியம்(III) கார்பனேட்டு தயாரிக்கலாம்:[3]
நியோடிமியம்(III) குளோரைடுடன் நீரில் கரைக்கப்பட்ட அம்மோனியம் பைகார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் நியோடிமியம்(III) கார்பனேட்டு உருவாகும்.[4] பண்புகள்வேதிப் பண்புகள்நியோடிமியம்(III) கார்பனேட்டு அமிலங்களில் கரைந்து கார்பனீராக்சைடை வெளியிடுகிறது:
அமிலங்களுடன் வினைபுரிந்து பல உப்புகளையும் நியோடிமியம்(III) கார்பனேட்டு உருவாக்கும். :
எடுத்துக்காட்டாக அசிட்டிக் அமிலத்துடன் வினைபுரிந்து நியோடிமியம் அசிட்டேட்டு உப்பை உருவாக்குகிறது:
அமோனியம் கார்பனேட்டு, சோடியம் கார்பனேட்டு, பொட்டாசியம் கார்பனேட்டு மற்றும் பிற உப்புகளுடன் சேர்ந்து நியோடிமியம்(III) கார்பனேட்டு அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது. வாலைவடி நீரைக் காட்டிலும் நீர்க்கரைசலில் இவற்றின் கரைதிறன் நன்றாக வெளிப்படுகிறது. சூடுபடுத்தினால் இவ்வுப்பை நியோடிமியம்(III) ஆக்சைடு போன்ற வேறு உப்பாகவும் மாற்ற முடியும்.[5] ஐதரசீன் சேர்மத்துடன் வினைபுரிந்து Nd2(CO3)3·12N2H4·4H2O என்ற சேர்மத்தைக் கொடுக்கிறது. இது ஓர் ஒளிபுகும் படிகமாகும். இப்படிகம் தண்ணீரில் சிறிதளவு கரையும். பென்சீனில் கரையாது. d20°C = 1.96 கி/செ.மீ3 என்பது இதன் கரைதிறன் அளவாகும்.[6] இயற்பியல் பண்புகள்நியோடிமியம்(III) கார்பனேட்டு படிகங்களாக உருவாகிறது.Nd2(CO3)3·n H2O என்ற பொது வாய்பாட்டிலான படிக நீரேற்று இதன் உட்கூறாக இருக்கும். வாய்பாட்டிலுள்ள n = 2.5 மற்றும் 8 வரை மாறுபடும். நியோடிமியம்(III) கார்பனேட்டு தண்ணீரில் கரையாது.[2] பயன்நியோடிமியம்(III) கார்பனேட்டை சீரொளிகள், கண்ணாடிகளுக்கு வண்ணம் பூசுதல் மற்றும் மின்கடத்தா பொருள்களில் பயன்படுத்த முடியும்[5] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia