பொட்டாசியம் கார்பனேட் என்ற வேதிச்சேர்மத்தின்மூலக்கூறு வாய்ப்பாடு (K2CO3) ஆகும். இது ஒரு வெள்ளை நிற உப்பு ஆகும். நீரில் கரையகிறது. எத்தனாலில் கரைவதில்லை. இது வலிமையான காரக்கரைசலை உருவாக்குகிறது. கார்பனீராக்சைடு உடன் பாெட்டாசியம் ஐதராக்சைடு உறிஞ்சு வினையின் மூலமாக இது தயாரிக்கப்படுகிறது. இது ஒரு நீர்உறிஞ்சும் பொருளாகும். பெரும்பாலும் ஈரமான திண்மமாக காணப்படுகிறது. பொட்டாசியம் கார்பனேட், சோப்பு மற்றும் கண்ணாடி உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
வரலாறு
பொட்டாசியம் கார்பனேட், பொட்டாசு என்பதன் முதன்மை கூறு ஆகும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட முத்து சாம்பல் அல்லது தார் உப்புக்களின் கூறாகவும் உள்ளது. வரலாற்றுரீதியாக, சூளையில் பேக்கிங் பொட்டாசு மூலம் முத்துச்சாம்பல் அசுத்தங்களை நீக்க உருவாக்கப்பட்டது. இறுதியாக கிடைத்த வெள்ளை தூளே முத்துச்சாம்பல் ஆகும். 1790 ல் பாெட்டாசு மற்றும் முத்துச்சாம்பல் உருவாக்கும் முறையை மேம்படுத்தும் காப்புரிமை முதன் முதலாக சாமுவேல் ஆப்கின்சு என்பவருக்கு அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தால் வழங்கப்பட்டது.
கடந்த 18ம் நூற்றாண்டுகளில் வட அமெரிக்காவில், சமையல் சோடாவின் (பேக்கிங் பவுடர்), வளர்ச்சிக்கு முன்னர் விரைவு ரொட்டிகளில்[2] புளிப்பேற்றிகளாக முத்துச்சாம்பல் பயன்படுத்தப்பட்டது.
தயாரிப்பு
இன்று, வணிக ரீதியாக, பாெட்டாசியம் குளோரைடை மின்னாற்பகுப்பதன் மூலம் பாெட்டாசியம் கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. வினையில் உருவான பொட்டாசியம் ஐதராக்சைடு,கரியமில வாயுவினால் கார்பனாக்கம் செய்யப்பட்டு பொட்டாசியம் கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது.
இது மற்ற பொட்டாசியம் சேர்மங்கள் தயாரிக்க பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
2KOH + CO2 → K2CO3 + H2O
பயன்கள்
வரலாறுகளில் சோப்பு, கண்ணாடி, மற்றும் சீன பொருட்கள் உற்பத்தி செய்யவும்,
கால்சியம் குளோரைடு மற்றும் மெக்னீசியம் சல்பேட்டு போன்று மிதமான உலர்த்தும் காரணியாக உள்ளது. இது அமிலச்சேர்மங்களுக்கு ஏற்றதல்ல. சில கீட்டோன்கள், ஆல்ககால் மற்றும் அமீன்களை காய்ச்சிவடித்தலுக்கு[3] முன்னர் உலர்த்தவும் பயன்படுகிறது.