தஞ்சாவூர் மராத்தியர்
தஞ்சாவூர் மராத்தியர் (Thanjavur Marathi) (பேச்சு வழக்கில் ராயர் என்று அழைக்கப்படுகிறது), என்பவர்கள், தமிழ்நாட்டின் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் வசித்து கொண்டு மராத்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். இவர்கள் தஞ்சாவூர் மராத்திய ஆட்சியின் போது தமிழகத்துக்கு வந்த ஆட்சியாளர்கள் மற்றும் சிப்பாய்களின் சந்ததியினர் ஆவார். மக்கள் தொகை2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 0.1% பேர் மராத்தி மொழியை தாய்மொழியாக கொண்டு பேசுபவர்கள் வாழ்கின்றனர்.[1] சரியான மாவட்ட அளவிலான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் மதிப்பீடுகளின்படி, மராட்டியர்கள் பெரும்பாலும் சென்னை நகரத்திலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, திருப்பத்தூர் ,கிருஷ்ணகிரி, வேலூர், இராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், காஞ்சிபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் மகாராட்டிரா, பெங்களூர், வட இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்ததால், தமிழகத்தில் மராத்தி மக்கள் தொகை சமீபத்தில் குறைந்துள்ளது.[2] மொழிதஞ்சாவூர் மராத்தி மக்களின் தாய்மொழி தஞ்சாவூர் மராத்தி மொழியாகும்.[3] நிறுவனங்கள்இந்தியாவின், பல்வேறு பகுதிகளிலும் தஞ்சாவூர் மராத்தி மக்களின் நலனை ஆதரிக்கும் பல அமைப்புகள் இங்கே உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று மராத்தா கல்வி நிதியம் (MEF), தென்னிந்திய மராத்தி பேசும் சமூகத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வியைப் பரப்புவதற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.[4] மேற்கோள்கள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia