இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்)
இராமாயணம் பெரும் வெற்றியடைந்த இந்திய தொலைக்காட்சித் தொடராகும்.[1][2] இத்தொடர் இராமனாந்த சாகரால் எழுதி இயக்கப்பட்டது. ஜனவரி 25, 1987 முதல் சூலை 31, 1988 வரை தூர்தர்சனில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.[3] இந்து சமயத் தொடர்புள்ள காவியமான இராமாயணத்தின் தொலைக்காட்சித் தழுவலே இத்தொடராகும். வால்மீகியின் இராமாயணம் மற்றும் துளசிதாசரின்' இராமசரிதமானசை முதன்மையாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது. இதில் சில பகுதிகள் கம்பரின் கம்ப ராமாயணத்திலிருத்தும் சிறிதளவு சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பப்பட்டது. இத்தொடர் ஒலிபரப்பப்படும் வேளையில் "தெருக்கள் வெறிச்சோடி காணப்படும்; கடைகள் மூடப்பட்டிருக்கும்; மக்கள் தொடர் தொடங்குமுன் தொலைகாட்சிப் பெட்டிகளைச் சுத்தம்செய்து மலர்மாலையிட்டு அலங்கரித்திருப்பர்" என பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டது[4] 2020 இல் கோவிட்-19 பெருந்தொற்று முழுவடைப்புக் காலத்தில் மீண்டும் இத்தொடர் ஒளிபரப்பப்பட்டு ஏப்ரல் 16, 2020 அன்று 77 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது.[5][6][7][8][9] நடிகர்கள்
உருவாக்கம்1986 ஆம் ஆண்டில் இராமானந்த சாகரின் தொலைக்காட்சித் தொடர் விக்ரம் ஒளர் பேத்தாள் ஓரளவு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இராமனந்த சாகர் தூர்தர்சனின் செயற்குழுவினரைச் சந்தித்து இராமாயணத்தின் தொலைக்காட்சித் தொடர் பதிப்பைத் தயாரிக்கும் விருப்பத்தைப் பற்றிக் கூறினார். இத்தொடர் சாகரின் வாழ்நாள் கனவாக இருந்தது. துவக்கத்தில் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டு பிறகு இதற்கு புத்துயிர் அளிக்கப்பட்டாலும், இது போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் இன உணர்ச்சியைத் தூண்டலாம் என்ற எண்ணத்தின் காரணமாகத் தாமதிக்கப்பட்டது. இறுதியாக இத்தொடர் 52 நிகழ்வுகளாகத் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது (இத்தொடருக்கு பேரளவிலான மக்களின் ஆதரவின் விளைவாக இரண்டு முறை இதன் நிகழ்வுகள் நீட்டிக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் 13 நிகழ்வுகள் மூலம் நீட்டிக்கப்பட்டு மொத்தமாக 78 நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன). மேலும் இதற்காகத் தொலைக்காட்சியை மக்கள் குறைவாகப் பார்க்கும் நேரமான ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது[10] மக்கள் ஆதரவும் செல்வாக்கும்இராமாயணத்தின் ஒளிபரப்பு தொடங்கிய போது இத்தொடர் மிகப்பெரிய அளவில் மக்களிடம் பிரபலமடைந்து 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றது.[2] முதலில் குறைவான நபர்களே பார்த்தாலும்,[10] இத்தொடருக்கான மக்களின் ஆதரவு ஒரு சமயத்தில் இந்தியா முழுவதும் வளர்ச்சிபெற்றது. இத்தொடருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு பற்றிக் குறிப்பிடும் போது இந்தியா டுடே செய்திப் பத்திரிகையானது "இராமயணக் காய்ச்சல்" எனப் பட்டப்பெயர் அளித்தது. (இந்து மற்றும் இந்து அல்லாத) சமய தொடர்புள்ள சேவைகளானது இந்நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு இணங்கிப் போவதற்காக மறு திட்டமிடப்பட்டன; இரயில்கள், பேருந்துகள் மற்றும் உள்ளூர் புகைவண்டிகள் இந்த நிகழ்ச்சி நடக்கும் போது நிறுத்தப்பட்டன; மேலும் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் இடத்தில் கூடினர்.[2][11] இந்தியத் திரைப்படங்களில் சமயத்தொடர்புள்ள கருப்பொருள்களைக் கொண்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருந்த போதும் இராமாயணம் சமயத்தொடர்புள்ள கதைகளைச்[2] சார்ந்து எடுக்கப்பட்ட முதல் இந்திய தொலைக்காட்சித் தொடராக விளங்குகிறது. மேலும் பல பிற சமயத்தொடர்புள்ள தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கப்படுவதற்கு ஊக்கமூட்டுவதாகவும் அமைந்தது. தொடர் பற்றிய விமர்சனங்கள்வேகமற்ற இசை, தொடர்பற்ற திரைக்கதை மற்றும் மோசமான தயாரிப்புத் தரத்தோடு இருப்பதால் துவக்கத்தில் இந்தத் தொடரை நகர்சார்ந்த இந்திய மற்றும் மேற்கத்திய திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்தனர். இத்தொடருக்கு மக்களின் ஆதரவு பெருகியதில் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான தொடராக (அந்த நேரத்தில்) இராமாயணம் மாறியது. எனவே பல விமர்சகர்கள் இந்தியப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியும் இந்தியத் தொலைக்காட்சிகளில் கலந்துரையாடல்களை நிகழ்த்தியும், மக்களின் ஆர்வத்தை இவ்வளவு தூரம் பெறுவதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தனர்.[10] உலக சாதனைஇராமாயணம் ஒளிபரப்பப்பட்ட நேரத்தில் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக விரைவிலேயே பெயர்பெற்றது. அதற்குப்பின், மறுஒளிபரப்பு மற்றும் வீடியோ தயாரிப்புகள் வழியாக இராமாயணம் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றது. மேலும் 2003 ஆம் ஆண்டு சூன் மாதம் வரை உலகில் அதிகமாகப் பார்க்கப்பட்ட புராணத் தொடராக லிம்கா புத்தகப் பதிவுகளில் சேர்க்கப்பட்டது.[12] ' துணைத்தயாரிப்புகள்இத்தொடர் நிறைவுபெற்ற சிலவாரங்களில் துணைத்தயாரிப்பான உத்தர் இராமாயணம் (பின்னர் லவ குசா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது) தூர்தர்சனில் அக்டோபர் 1988 இல் ஒளிபரப்பப்பட்டது.[13][14] இராமாயணத்தின் தயாரிப்பு குழு மற்றும் "இராமயணத்" தொடரில் நடித்த அதே நடிகர்களுடன் உருவாக்கப்பட்டது. இது இராமரின் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளின் உட்கதையாகும்; 2008 ஆம் ஆண்டில் சாகர் ஆர்ட்சின் மூலம் தயாரிக்கப்பட்டு, இராமாயணத்தின் மறுஆக்கமானது என்.டி.டி.வி இமேசினில் (NDTV Imagine) ஒளிபரப்பப்பட்டது.[15][16] அடிக்குறிப்புகள்
குறிப்புகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia