ஜெயந்தன் (இராமாயணம்)

ஜெயந்தன் (இராமாயணம்)
காக வடிவம் கொண்டு சீதையை கொத்த வரும் ஜெயந்தன்
வகைதேவர்கள்
இடம்அமராவதி
சகோதரன்/சகோதரிஜெயந்தன், ஜெயந்தி
நூல்கள்இராமாயணம், பாகவத புராணம்

ஜெயந்தன்[1],தேவர்களின் தலைவன் இந்திரன்-இந்திராணி தம்பதியரின் மகனும்[2], ஜெயந்தியின் அண்ணனும் ஆவார். இராமாயணத்தில், ஜெயந்தன் காகம் வடிவம் கொண்டு சீதையை கொத்திய கதை கூறப்பட்டுள்ளது.

இராமாயணம்

காக வடிவத்தில் ஜெயந்தன்

இராமயாணத்தின் சுந்தர காண்டத்தில், இராவணனால் அசோக வனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதை, தனக்கும், இராமருக்கும் மட்டும் தெரிந்த ஒரு நிகழ்ச்சியை, இராமருக்கு தெரிவிக்குமாறு அனுமனிடம் கூறினார். 14 ஆண்டு வனவாசத்தின் போது சித்திரகூடம் காட்டில் சீதையின் மடியில் தலைவைத்து இராமன் படுத்திருந்த நேரத்தில் காகம் வடிவத்தில் வந்த ஜெயந்தன் சீதையின் மார்பைக் கொத்திக் கிழித்தான்.[3]இதனை அறிந்த இராமர் ஜெயந்தன் மீது சக்தி வாய்ந்த பிரம்மாஸ்திரத்தை ஏவினார். தன்னை தாக்க வந்த கணை ஜெயந்தனால் தடுக்க இயலாது, இந்திரன், பிரம்மா, சிவன் முதலானவர்களிடம் சரண் அடைந்தான். அவர்கள் கணையை ஏவியவரிடமே சரணாகதி அடைந்தால் மட்டுமே உயிர் தப்புவாய் எனக்கூறினர். அவ்வாறே, ஜெயந்தன் இராமரிடம் சரணாகதி அடைந்து, வலது கண்ணை மட்டும் இழந்து, உயிர் தப்பினான். இராமருக்கு மட்டுமே தெரிந்த இந்நிகழ்ச்சியை கிஷ்கிந்தையில் இருக்கும் இராமரிடம் கூறுவாயாக எனச்சீதை அனுமனிடம் கேட்டுக் கொண்டார்.

மேற்கோள்கள்

  1. Monier Williams Sanskrit-English Dictionary p. 413
  2. www.wisdomlib.org (2009-04-12). "Jayanta, Jayamta: 30 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-10-07.
  3. Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. p. 354. ISBN 0-8426-0822-2.

உசாத்துணை

  • Goldman, Robert P.; Goldman, Sally J. Sutherland (1996). The Ramayana Of Valmiki: Sundarakāṇḍa. The Ramayana Of Valmiki: An Epic Of Ancient India. Vol. V. Princeton University Press. ISBN 0-691-06662-0.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya