விராதன்
![]() விராதன் (Virādha) வால்மீகி இராமாயண இதிகாசம் கூறும் தண்டகாரண்யத்தில் வாழ்ந்த அரக்கன் ஆவான். ஆரண்ய காண்டத்தில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரமாக வருகிறான். வனவாசத்தின் போது சீதையுடன் இராம – இலக்குமணர்கள் தண்டகாரண்யத்தில் வாழ்ந்திருந்த போது விராதன் சீதையை கவர்ந்து சென்றான்.[6] இதனை கண்ட இராம-இலக்குமணர்கள் விராதனின் இரண்டு கைகளை வெட்டி, பெரிய குழி வெட்டி உயிருடன் புதைத்தனர்.[7][8] வரலாறு![]() ஆயுதங்களால் வெல்ல முடியாத வரத்தினைக் கொண்டிருந்த விராதனை சகோதரர்கள் முதலில் கைகளை உடைத்து, பின்னர் ஒரு கல்லறையில் உயிருடன் புதைத்துக் கொன்றுவிடுகிறார்கள். அசுரனின் கைகள் உடைந்தவுடன், தன்னை சாபத்திலிருந்து விடுவித்ததற்காக சகோதரர்களைப் பாராட்டத் தொடங்குகிறான். விராதன் முற்பிறவியில் தும்புரு எனும் கந்தர்வர் ஆவான். குபேரனின் சாபத்தால் அரக்கனாகிக் தண்டகாரண்யம் காட்டில் திரிந்தது வாழ்ந்து, இராமாவதாரத்தின் போது இராமன் கையால் இறந்து, சாபவிமோசனம் பெறும் தன்மை இவனுக்கு இருந்தது.[9][10] சாபவிமோசனம் பெற்ற விராதன் வானுலகம் செல்கிறான். ![]() தாய்லாந்தின் இராமயமான இராமகீர்த்தியில், விராதன் பிரா பிராப் என்று அழைக்கப்படுகிறான். தாய் பதிப்பில், இவன் பவா தாங் பார்க்கின் நிறுவனராகவும் அதன் பாதுகாவலராகவும் இருக்கிறான். கடந்த காலத்தில், விராதன் சிவனின் மற்றொரு வடிவமான பைரவராக இருந்தான் என்று நம்பப்படுகிறது. எனவே, விராதன் ஒரு உயர்ந்த அரக்கனாகக் கருதப்பட்டான். மேலும் தாய் நிகழ்த்து கலைகளில் கோன் (முகமூடி நடன நாடகம்) நடன நாடகத்தில் உயர்வாகக் மதிக்கப்படுகிறான். வழிபாட்டு விழாவில், இவனது முகமூடி மிக உயர்ந்த நிலையில் வைக்கப்படும். மேலும் இவனது கதாபாத்திரத்தின் நடன அசைவுகள் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகின்றன.[11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia