நந்திகிராமம், அயோத்தி
நந்திகிராம் அல்லது பரதகுண்டம் (Nandigram Or Bharatkund), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள சோகாவால் வருவாய் வட்டத்தில் உள்ள கிராமம். ஆகும்.[1][2]நந்திகிராம் அயோத்திக்கு தெற்கே 13.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நந்திகிராம் 764 குடியிருப்புகளும், 4,454 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 2,258 மற்றும் பெண்கள் 2,196 உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 567 (12.73%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 63.34% ஆக உள்ளது.மக்கள் தொகையில் பட்டியல் சமூத்தினர் 31.63% உள்ளனர்.[3] இராமாயணத்தில்இராமன் 14 ஆண்டு வனவாசம் சென்ற போது, பரதன் நந்திகிராமத்தில் தங்கி அயோத்தியை ஆட்சி செய்தான்.[4] தொடருந்து நிலையம்நந்திகிராமத்தில் பரத்குண்ட் தொடருந்து நிலையம் உள்ளது. [5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia