இரேனியம்(IV) குளோரைடு (Rhenium(IV) chloride) ReCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். கருப்பு நிற சேர்மமான இது ஓர் இருமநிலை சேர்மமாக கருதப்படுகிறது. ஆனால் நடைமுறையில் சிறிதளவே இந்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ReCl4 இன் இரண்டாவது பல்லுருத்தோற்றமும் அறியப்படுகிறது.[1]
தயாரிப்பு
இனியம்(V) குளோரைடு மற்றும் இரேனியம்(III) குளோரைடு ஆகிய ஒரே தனிமம் வெவ்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளிலுள்ள இரண்டு சேர்மங்கள் தங்களுக்குள் வினைபுரிந்து இடைநிலை ஆக்சிசனேற்ற நிலை எண்ணைக் கொண்ட சேர்மமான இரேனியம்(IV) குளோரைடு சேர்மத்தை உருவாக்குகின்றன.[2]
120 °செல்சியசு வெப்பநிலையில் டெட்ராகுளோரோயெத்திலீன் சேர்மமும் நல்ல குறைப்பானாகப் பயன்படுகிறது:
கட்டமைப்பு
எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் ஒரு பல்லுருவக் கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றன. Re–Re பிணைப்புகளுக்கு இடையிலான தூரம் 2.728 Å ஆகும். இரேணியம் அணுக்கள் ஆறு குளோரைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்ட எண்முக தோற்றத்திலுள்ளன. இரண்டு எண்கோணங்கள் இம்முகங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன். Re2Cl9 துணைக்குழுக்கள் குளோரைடு ஈந்தணைவிகளுடன் பாலம் அமைப்பதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கட்டமைப்பின் மையக்கருத்து - மூலை-பகிர்வு ஈரெண்முகம் - இரும உலோக ஆலைடுகளில் அசாதாரணமானதாகும். [1]
மேற்கோள்கள்
↑ 1.01.1"Chemistry of Rhenium(IV) Chloride. II. Structure of One of the Polymorphs (β) and Evidence for a New Polymorph (γ)". Journal of the American Chemical Society95 (4): 1159–1163. 1973. doi:10.1021/ja00785a027.
↑Erwin Riedel; Christoph Janiak (2011). Anorganische Chemie. Walter de Gruyter. ISBN978-311022567-9.