சோடியம் பெர்யிரேனேட்டு
சோடியம் பெர்யிரேனேட்டு (Sodium perrhenate) என்பது NaReO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். சோடியம் இரேனேட்டு(VII) என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. வெண்மை நிறத்தில் படிகத்திண்மமாகக் காணப்படும் இது நீரில் கரைகிறது. இரேனியம் சேர்மங்கள் பலவற்றைத் தயாரிக்க இதுவொரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. சோடியம் பெர்குளோரேட்டு, சோடியம் பெர்மாங்கனேட்டு போன்ற சேர்மங்களின் கட்டமைப்பை ஒத்ததாக சோடியம் பெர்யிரேனேட்டின் கட்டமைப்பும் உள்ளது. தயாரிப்புஇரேனியம்(VII) ஆக்சைடுடன் ஒரு காரம் சேர்த்து அல்லது பொட்டாசியம் உப்பிலிருந்து அயனிப் பரிமாற்றம் செய்து சூடுபடுத்துவதால் சோடியம் பெர்யிரேனேட்டு தயாரிக்கப்படுகிறது. வினைகள்எத்தனாலில் உள்ள சோடியத்துடன் இது வினைபுரிந்து நோனா ஐதரிடோயிரேனேட்டு சேர்மத்தை உருவாக்குகிறது [1]. இதேபோல பாலிசல்பைடு கரைசல்களுடன் சேர்ந்து வினைபுரிந்து டெட்ராதயோயிரேனேட்டைக் கொடுக்கிறது [2]. மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia