இரேனியம் பெண்டாபுளோரைடு
இரேனியம் பெண்டாபுளோரைடு (Rhenium pentafluoride) ReF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரேனியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. ஐதரோபுளோரிக் அமிலத்தின் இரேனிய உப்பு என்று இது வகைப்படுத்தப்படுகிறது. தயாரிப்புஇரேனியம் அறுபுளோரைடு சேர்மத்துடன் ஐதரசன், இரேனியம், அல்லது தங்குதனைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இரேனியம் பெண்டாபுளோரைடு உருவாகிறது:
இயற்பியல் பண்புகள்இரேனியம் பெண்டாபுளோரைடு நேர்சாய்சதுர படிக அமைப்பில் a = 0.57 நானோமீட்டர், b = 1.723 நானோமீட்டர், c = 0.767 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களுடன் மஞ்சள்-பச்சை நிறப் படிகங்களாக உருவாகிறது.[1] இரேனியம் பெண்டாபுளோரைடு தண்ணீருடன் வினைபுரியும். இரேனியம் பெண்டாபுளோரைடு எளிதில் ஆவியாகும். Re2F10 இருபடிகளால் இரேனியம் பெண்டாபுளோரைடு ஆக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia