இரேனியம் மூவாக்சைடு குளோரைடு (Rhenium trioxide chloride) ReO3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். நிறமற்றதாகவும் காய்ச்சி வடிகட்டக்கூடியதாகவும் அபரகாந்தப் பண்பு கொண்ட திரவமாகவும் இது காணப்படுகிறது. மேலும் இது ஓர் இரேனியம் ஆக்சிகுளோரைடு வகை சேர்மமாகும்.[1]
1.71 மற்றும் 2.22 Å பிணைப்பு இடைவெளிகள் கொண்ட Re-O மற்றும் Re-Cl பிணைப்புகளால் ஆக்கப்பட்ட நாற்கோண கட்டமைப்பை இரேனியம் மூவாக்சைடு குளோரைடு ஏற்றுக்கொள்கிறது.[4] இதற்கு நேர்மாறாக இரேனியம் மூவாக்சைடு புளோரைடு (ReO3F) எண்முக இரேனியம் மையங்களுடன் பல்லுருவப் படிகக்கட்டமைப்பை ஏற்கிறது.
மேற்கோள்கள்
↑Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 1052. ISBN0080379419.
↑O. Glemser; R. Sauer (1963). "Rhenium (VII) Oxychloride". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 2pages=1480. NY,NY: Academic Press.