இரேனியம் எப்டாபுளோரைடு
இரேனியம் எப்டாபுளோரைடு (Rhenium heptafluoride) என்பது ReF7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்தில் குறைவான உருகுநிலை கொண்டதாக இச் சேர்மம் காணப்படுகிறது. வெப்பத்திலும் நிலைப்புத் தன்மை கொண்ட ஒரே உலோக எப்டாபுளோரைடு இரேனியம் எப்டாபுளோரைடு ஆகும்[1]. அயோடின் எப்டாபுளோரைடில் உள்ளது போலவே இச்சேர்மத்திலும் சிதைந்த ஐங்கோண இரட்டைப்பட்டைக் கூம்பு கட்டமைப்பு காணப்படுகிறது. 1.5 கெல்வின் வெப்பநிலையில் தோன்றும் நியூட்ரான் விளிம்பு இதை உறுதிப்படுத்துகிறது[2] . எலக்ட்ரான் விளிம்பு ஆய்வுகள் இக்கட்டமைப்பு திடமானதல்ல என்று தெரிவிக்கின்றன[3] 400 பாகை செல்சியசு வெப்ப நிலையில் இரேனியம் மற்றும் புளோரின் தனிமங்களை வினை புரியச்செய்து இரேனியம் எப்டாபுளோரைடு தயாரிக்கப்படுகிறது:[4]
CsF போன்ற புளோரைடு வழங்கிகளைப் போல இங்கும் ReF8−ReF8− எதிர்மின் அயனி ) உருவாகிறது. இது சதுர எதிர் பட்டகக் கட்டமைப்பில் உள்ளது. [5] With ஆன்டிமணி பென்டாபுளோரைடு (SbF5) போன்ற புளோரைடு ஏற்பிகளுடன் ReF6+ நேர்மின் அயனி உருவாகிறது. [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia