இரேனியம் இருசெலீனைடு
இரேனியம் இருசெலீனைடு (Rhenium diselenide) என்பது ReSe2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இதை இரேனியம் டைசெலீனைடு என்றும் அழைப்பார்கள். அடுக்குக் கட்டமைப்பை கொண்டுள்ள இச்சேர்த்தின் ஒவ்வொரு அடுக்கிலும் அணுக்கள் வலிமையாகப் பிணைக்கப்பட்டுள்ளன. மேலும் பலவீனமான வாண்டர்வால்சு பிணைப்புகளால் இவ்வடுக்குகள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே ஒட்டுமொத்தப் பிணைப்பிலிருந்து அடுக்குகளை எளிமையாக உரித்துப் பிரிக்கமுடியும். தயாரிப்பு![]() மிகச் சிறிய தடிமனுடைய மூன்று- அணு அடுக்குகள் கொண்ட இரேனியம் இருசெலீனைடு சேர்மத்தை சுற்றுச்சூழல் அழுத்தத்தில் வேதியியல் ஆவிப்படிவு முறையில் தயாரிக்க முடியும். ஆர்கான் மற்றும் ஐதரசன் வாயுக்களின் கலவை ஒரு குழாயின் வழியாக செலுத்தப்படுகிறது. இக்குழாயின் முனைகள் வெவ்வேறு வெப்பநிலையில் வைக்கப்படுகின்றன. தளப்பொருளும் ReO3 தூளும் சூடான முனையில் வைக்கப்பட்டு 750 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது. செலீனியம் தூள் குளிர் முனையில் வைக்கப்பட்டு 250 பாகை செல்சியசு வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது[4]
பண்புகள்![]() இடைநிலை உலோகங்களின் மற்ற சால்கோகெனைடுகள் போல இரேனியமும் அடுக்குக் கட்டமைப்பை ஏற்றுள்ளது. இருப்பினும் மற்ற அடுக்கு சால்கோகெனைடுகள் உயர் அறுகோணக சீரொழுங்கில் உள்ளன. இரேனியம் இருசெலீனைடு மிகக் தாழ்ந்த முச்சரிவு சீரொழுங்கை ஏற்றுள்ளது. இச்சீரொழுங்கு ஒட்டுமொத்த கட்டமைப்பு நிலையிலிருந்து ஒற்றை அடுக்கிற்கு மாறுவதில்லை [4]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia