ஈஸ்வர கிருஷ்ணர்ஈஸ்வர கிருஷ்ணர் (Isvara Krishna (சமசுகிருதம்: ईश्वर कृष्णः) (காலம் கிபி 350)[1]இந்திய மெய்யியல் அறிஞர் ஆவார். கபிலரின் குரு-சீடர் பரம்பரையில் வந்த ஈஸ்வர கிருஷ்ணர், சாங்கிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு 60 அறிவியல் தலைப்புகளில் சஷ்டி தந்திரம் எனும் சாங்கிய காரிகை நூலை இயற்றியுள்ளார். [2][3][4] இந்நூல் தற்போது கிடைக்கப்பெறவில்லை.[4] கிபி ஆறாம் நூற்றாண்டின் நடுவில் சாங்கிய காரிகை நூலை சீனாவிற்கு கொண்டு சென்று, சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.[5] 11ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த பாரசீக அறிஞர் அல்-பிருனி தமது குறிப்புகளில் சாங்கிய காரிகை குறித்த நூலைக் குறிப்பிட்டுள்ளார்.[6] துவக்க கால பௌத்த அறிஞர்களிடத்தில் சாங்கிய தத்துவம் கவரப்பட்டதுடன், தற்போதும் சமணம் மற்றும் பௌத்த தத்துவங்களில் சாங்கிய தத்துவங்கள் காணப்படுகிறது.[7][8] சாங்கிய தத்துவங்கள், யோகம், சமணம், வைணவம் மற்றும் சைவத் தத்துவங்களில் பரவலாக காணப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia