பதஞ்சலி யோகசூத்திரம்![]() பதஞ்சலி யோகசூத்திரம், பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1. சமாதி, 2. சாதனை, 3. விபூதி, 4. கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 196 சூத்திரங்கள் கொண்டது. யோக சூத்திரத்தின் சிறப்புயோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல்தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல், அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே. ஒற்றை வரியில் சொல்லப்போனால் 'மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக' யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும். யோக சூத்திரத்தின் உரைநூல்கள்பதஞ்சலி யோகத்துக்கு பல உரைகள் பண்டைக்காலம் முதல் உள்ளன. வியாச பாஷ்யமே முதல் உரை. அதுவே அடிப்படையானதுமாகும். இவ்வுரை சாங்கிய பிரவசன பாஷ்யம் எனப்படுகிறது. சாங்கிய சிந்தனையின் நீட்சியாக வியாசர் யோகத்தைக் காண்கிறார் . வாசஸ்பதி மிஸ்ரர்ரின் 'விசாராதி ' என்ற உரையும் புகழ் பெற்றது . இயற்றியவரும் இயற்றப்பட்ட காலமும்இயற்றியவர்யோக சூத்திரம் குறித்த ஏற்கனவே இருந்த அறிவையும் விவரங்களையும் சேகரித்து உணர்ந்து கி மு 400 ஆண்டிற்கு முன்பே பதஞ்சலி முனிவர் தொகுத்து வழங்கியுள்ளார்.[1][2][3] 40 இந்திய மொழிகள், இரண்டு வேற்று மொழிகள் பழைய ஜாவா மற்றும் அரபிக் உட்பட 40க்கு மேற்பட்ட மொழிகளில் அதிகப்படியாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் ஆகும்.[4] பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் 12ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 700 ஆண்டுகள் வழக்கிலிருந்து மறைந்து போயிருந்தாலும், விவேகானந்தரின் முயற்சியாலும் தீசாபிகல் சங்கத்தின் முயற்சியாலும் 19ஆம் நூற்றாண்டு இறுதியில் புத்துயிர் பெற்று வழக்கத்திற்கு வந்தது என்று டேவிட் கோர்டன் குறிப்பிடுகிறார்.[5] 20ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இடைக்காலத்தில் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் அல்லாமல் பல்வேறு யோகங்கள் குறிப்பாக பகவத் கீதை, யோக வசந்தம், ஹத யோகம், தஸ்த்ரிக் யோகம் போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன. 20ஆம் நூற்றாண்டில் யோகம் பயில்பவர்கள் பதஞ்சலியின் யோக சூத்திரத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தலையாய இடத்தைப் பெற்றுத் தந்தனர். [6] இந்து ஆச்சார வழக்கத்தின்படி பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் யோக தத்துவத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.[7] இருந்தாலும் பிற்காலத்தில் யோக வழிமுறைகளின் மீது பதஞ்சலி முனிவரின் யோக சாத்திரத்தின் தாக்கம் குறித்து பல விதமான கருத்துக்கள் நிலவி வருவதாக டேவிட் கோர்டன் வைட் கூறுகிறார். யோக சூத்திரம் பதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.[8][9] பதஞ்சலி முனிவர் என்னும் பெயர் குறித்து பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. சமஸ்கிருத மொழியில் இலக்கண நூல் ‘மகாபாஸ்யம்’ மும் பதஞ்சலி முனிவர் என்பவரால் எழுதப்பட்டது என்று கூறுவர். இருவரும் ஒருவரா அல்லது வேறு நபர்களா என்பது குறித்தும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. இயற்றப்பட்ட காலம்பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம், முதலாம் நூற்றாண்டில் இதற்கு எழுதிய உரையின் அடிப்படையிலும் மற்ற இலக்கியங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் கிமு 400 ஆண்டு வாக்கில் எழுதப் பட்டிருக்கலாம் என்று பிலிப் ஏ மாஸ் என்பவர் மதிப்பிடுகிறார்..[10] எட்வின் பிரயனட் இவை சுமார் பல வல்லுனர்களால் முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் கி பி நான்காம் நூற்றாண்டில் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். [11] மிசலி டெஸ்மரிஸ் இந்த யோகசூத்திரம் கிமு 500 லிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டிருக்கலாம் என்பது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்."[12] 1.சமாதி பாதம்பதஞ்சலி யோக சூத்திரத்தில் முதலில் சொல்லப்பட்ட பாதம் சமாதி பாதம் ஆகும்.இது 51 சூத்திரங்களைக் கொண்டது.ஐந்துவித எண்ணங்களான பிரமாண, விபா்யய, விகல்ப, நித்ரா மற்றும் ஸ்மிருதி பற்றி விளக்கி அவற்றை பயிற்சி, பற்றின்மையால் அடக்க வழி சொல்லப்படுகிறது. 2.சாதனா பாதம்இது 55 சூத்திரங்களைக் கொண்டது. இந்த பாதத்தில் சித்த சுத்திக்கான கிாியா யோகம் விளக்கப்பட்டுள்ளது. கா்மா, கா்ம பலன் பற்றியும் முக்குணங்களின் மாறுதலான 24 தத்துவங்களான பிரகிருதி பற்றியும் கூறப்பட்டுள்ளது. சித்தத்தின் ஐந்து நிலைகள்நிருத்தம்' என்ற சமாதி நிலையை அடைய இருப்பவன் அதற்கு முன் சித்தத்தின் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டியவனாகிறான். அவை 1.சிஃப்தம் 2.முத்தம் 3.விசிஃப்தம் 4.ஏகாக்ரகம். இந்த நான்கு நிலைகளைக் கடந்தவனுக்கு 5வது நிலையான நிருத்தம் என்கின்ற சித்த விருத்திகள் அடக்கப்பட்ட மனநிலை கிடைக்கும் [13] . மூன்று வகை பிரமாணங்கள்1.பிரத்யட்ஸம்- ஐம்புலன்கள் மூலம் நாமே நேரடியாகக் கண்டறிவது. இது உண்மை அறிவாகும். 2.அனுமானம்(ஊகம்)- உண்மையறிவைத் தரக்கூடிய இது பொருள்களிடையே உள்ள ஒருபடித் தன்மையை சாா்ந்தது. 3.ஆகமம்- சப்தப் பிரமாணம் என்றும் கூறுவாா்கள். உண்மையை நோில் கண்டறிந்த சான்றோா்களின், ரிஷிகளின் சுய அனுபவ வேதவாக்கும் வேதவேதாந்தமும் ஒன்று என்பதால் ஆப்தா்களின் வாக்காலேயே வேதம் உண்மையாகிறது.[13] அஷ்டாங்க யோகம்![]() பதஞ்சலி முனிவர் முதல் சூத்திரத்தில் இந்நூலின் குறிக்கோளையும் இரண்டாவது சூத்திரத்தில் யோகம் என்பதற்கு விளக்கமும் கூறுகிறார்.விவேகானந்தர் சித்தத்தை பல எண்ணங்களில் சிதற விடாமல் ஒருமுகப் படுத்துவது யோகம் என்று குறிப்பிடுகிறார்."[14] பதஞ்சலி முனிவர் வாழ்க்கையின் குறிக்கோளாக ‘சித்த விருத்தி நிரோதக யோகக’ என்று குறிப்பிடுகிறார். மனதில் உள்ள எண்ணங்களை நெறிப்படுத்துவதுதான் யோகம், இது தான் லட்சியம் என்று குறிப்பிடுகிறார்.[15] மனம் ஒரு கருவி இது பல காரியங்களைச் செய்கிறது. முதலில் ஐம்புலன்களின் பின் நின்று அவைகளின் மூலமாக அறிவைப் பெற கருவியாக அமைகிறது. பின் தானாகவே சிந்தித்தும் அறிவை வளர்த்துக் கொள்கிறது. தன்னையே சுத்தப் படுத்திக் கொள்ளவும் ஒரு கருவியாகவும் பயன்படுகிறது. தானே செயலைச் செய்பவனாகவும் (கர்த்தா), பலனை அனுபவிப்பவனுமாக ( போக்தா) அனுமானம் செய்து கொள்கின்றது. இப்படிப்பட்ட மனதை அஷ்டாங்க யோகத்தினால் நெறிப்படுத்துவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்று பதஞ்சலி முனிவர் இன்னூலில் குறிப்பிடுகிறார். எட்டு அங்கங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia