கைவல்யம்கைவல்யம் (சமசுகிருதம்: कैवल्य) கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் எழுதிய யோகக் சூத்திரங்கள் நான்கு பாதங்கள் கொண்டது. அவற்றில் சமாதி, சாதனை, விபூதிக்கு அடுத்து நான்காவதாக உள்ள கைவல்யம் பாதத்தில் 196 சுலோகங்கள் கொண்டது. இது அட்டாங்க யோகத்தின் இறுதி இலக்கு ஆகும். கைவல்யம் என்பது மனிதனின் "பற்றற்ற தன்மை" அல்லது "தனிமை" என்று பொருள்படும். இது ஆத்மாவை மாயையிலிருந்து தனிமைப்படுத்தி, பிறவிச்சுழற்சியிலிர்ந்து விடுதலை அல்லது மோட்சம் அடைவதே கைவல்ய-முக்தி என முக்திகா மற்றும் கைவல்ய உபநிடதம் போன்ற உபநிடதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் வாழும்போது சீவ முக்தி அடைவதும் மற்றும் மரணத்திற்குப் பிறகு விதேக முக்தி அடைவதே கைவல்யத்தின் நோக்கமாகும்.[1] பதஞ்சலி யோக சூத்திரத்தின் நான்காவது அத்தியாயத்தில் 34 யோக சூத்திரங்கள், நமது முடிவில்லாத பிறவிச்சுழற்சிகளால் விட்டுச் செல்லும் பதிவுகளை அழிக்க வேண்டியதன் அவசியத்தின் பின்னணியில் உள்ள காரணங்களைக் எடுத்துரைக்கிறது. கைவல்யத்தை அடைந்த யோகி, சமாதி பாதத்தில் விவரிக்கப்பட்டுள்ள முழுமையான உண்மையான உணர்வு அல்லது பிரக்ஞையை அடைந்து, அனைத்து தளைகளிலிருந்தும் விடுபட்டு விடுதலை பெற்றவனாக மாறுகிறார். உபநிடதங்கள்கேவலம் அல்லது கைவல்யம் அல்லது கைவல்ய-முக்தி போன்ற சொற்கள் , கைவல்யா அல்லது கைவல்ய-முக்தி என்ற சொற்கள் சுவேதாசுவதர உபநிடதம் (I மற்றும் VI) கைவல்ய உபநிடதம் (25), அமிர்தபிந்து உபநிடதம் (29) மற்றும் முக்திகா (1.18, 26, 31) உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது.[2] முக்திகா உபநிடதம் (சுலோகம் 1.18-29) அனுமனுக்கு ராமரால் விளக்கப்பட்டது. இது மோட்சத்தின் மிக உயர்ந்த வடிவம் மற்றும் அனைத்து உபநிடதங்களின் சாராம்சமாகும். இது நான்கு வகையான முக்திகளான சாலோக்யம், சாமீப்யம், சாருப்யம் மற்றும் சாயுஜ்யம் ஆகியவைகளை விட உயர்ந்தது.[1] அதே உபநிடதத்தின் 2வது பிரிவில், கைவல்ய-முக்தி என்பது பிராரப்தம் கர்மாவிலிருந்து சீவ முக்தி மற்றும் விதேக முக்தி ஆகியவற்றிலிருந்து இறுதி விடுதலை ஆகும். யோகதத்துவ உபநிடதம் (16-18) "கைவல்யா என்பது சுயத்தின் இயல்பு (ஆன்மா), உன்னத நிலை (பிரம்மம்) என்று கூறுகிறது. அது உறுப்புகள் இல்லாதது மற்றும் அழியாதது. இது நிஜ-இருப்பு, அறிவு மற்றும் பேரின்பம் ஆகியவற்றின் நேரடி உள்ளுணர்வு ஆகும். இது பிறப்பு, இருப்பு, அறிவு மற்றும் அறிதல், அங்கீகாரம் என்று அழைக்கப்படுகிறது. சமண மதத்தில்கேவல ஞானம் என்றும் அழைக்கப்படும் கைவல்யம் என்பது சமண சமயத்தில் சர்வ அறிவாற்றலைக் குறிக்கிறது மற்றும் முழுமையான புரிதல்[3] அல்லது உச்ச ஞானம் என்பர்.[4] கேவல ஞானம் அனைத்து ஆத்மாக்களின் உள்ளார்ந்த குணம் என்று நம்பப்படுகிறது. இந்த குணம் ஆன்மாவைச் சுற்றியுள்ள கர்ம துகள்களால் மறைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆன்மாவும் இந்த கர்மத் துகள்களைக் களைவதன் மூலம் சர்வ அறிவைப் பெறுவதற்கான சாத்தியம் உள்ளது. சமண நூல்கள் கேவல ஞானம் எனப்படும் கைவல்யத்தின் பன்னிரண்டு நிலைகளைப் பற்றி பேசுகின்றன. கேவல ஞானத்தை அடைந்த ஒரு ஆன்மா ஒரு கெவலின் (केवलिन्) என்று அழைக்கப்படுகிறது.[5] சமணர்களின் கூற்றுப்படி, கெவலின்கள் மட்டுமே அனைத்து அம்சங்களிலும் வெளிப்பாடுகளிலும் உள்ள பொருட்களைப் புரிந்து கொள்ள முடியும்; மற்றவர்கள் பகுதியளவு அறிவை மட்டுமே பெற முடியும்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia