ஊரப்பாக்கம் தொடருந்து நிலையம்
ஊரப்பாக்கம் தொடருந்து நிலையம் (Urappakkam railway station, நிலையக் குறியீடு:UPM) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சென்னையின் புறநகர்ப் பகுதியான ஊரப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 37 கி.மீ (23 மைல்) தொலைவில் அமைந்துள்ளது மற்றும் ஊரப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 29 மீ (95 அடி) உயரத்தில் உள்ளது. வரலாறு![]() தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1] சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia