மறைமலைநகர் தொடருந்து நிலையம்
மறைமலைநகர் - காமராஜர் தொடருந்து நிலையம் (Maraimalai Nagar Kamarajar Railway Stationநிலையக் குறியீடு:MMNK) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம், சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதியான மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 47 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மற்றும் மறைமலைநகரில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 55 மீ உயரத்தில் உள்ளது. வரலாறு1965 ஆம் ஆண்டு சனவரி 9 ஆம் தேதி, தாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கப்பட்டபோது, இந்த நிலையத்தின் வழித்தடமும் மின்மயமாக்கப்பட்டது.[1] சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia