ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி (Kayts Electorate) என்பது 1931 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் கடலையும், கிழக்கிலே யாழ்ப்பாணக் குடாவையும் எல்லைகளாகக் கொண்டு, நெடுந்தீவு, ஊர்காவற்துறை உட்பட்ட சப்த தீவுகளை உள்ளடக்கியதாகும். 1960 மார்ச் தேர்தலில் காரைநகர் இத்தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.[1] 1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[2]. 1989 தேர்தலில் ஊர்காவற்துறைத் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. உறுப்பினர்கள்
அரசாங்க சபைத் தேர்தல்கள்1931 தேர்தல்கள்பிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது.[3] தொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது.[4] இதனால், இலங்கையின் வட மாகாணத்தின் அனைத்து நான்கு தொகுதிகளிலும் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.[4] 1934 இடைத்தேர்தல்வட மாகாணத் தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன[5] ஊர்காவற்றுறைத் தேர்தல் தொகுதியில் நெவின்ஸ் செல்வதுரை தெரிவு செய்யப்பட்டார்.[5] 1936 தேர்தல்கள்பிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 56,723 ஆவர். 1936 சனவரியில் இடம்பெற்ற தேர்தல் நியமன நாளன்று வை. துரைசுவாமியை இ. முருகேசம்பிள்ளை பிரேரிக்க, பீலிக்சு பொன்னம்பலம் அனுமதித்தார். வேறு எவரும் போட்டியிட முன்வராததால், துரைசுவாமி போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்.[6] நாடாளுமன்றத் தேர்தல்கள்1947 தேர்தல்கள்1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[7]:
1952 தேர்தல்கள்24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:
1956 தேர்தல்கள்5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:
1960 (மார்ச்) தேர்தல்கள்19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[11]:
1960 (சூலை) தேர்தல்கள்20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[12]:
வி. ஏ. கந்தையா 1963 சூன் 4 இல் இறந்தார். 1963 இடைத்தேர்தல்ஆகத்து 1963 இல் இத்தொகுதில் நடைபெற்ற இடைத்தேர்தல்முடிவுகள்:[13][14]
1965 தேர்தல்கள்22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[15]:
1970 தேர்தல்கள்27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[16]:
1977 தேர்தல்கள்21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[17]:
இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கா. பொ. இரத்தினம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[18]. இவற்றையும் பார்க்கமேற்கோள்களும் குறிப்புகளும்
|
Portal di Ensiklopedia Dunia