எதிர்நீச்சல் (1968 திரைப்படம்)
எதிர்நீச்சல் (Edhir Neechal (1968 film)) கை. பாலசந்தர் இயக்கி [2]1968 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, சௌகார் ஜானகி, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1] சோம்பு மித்ராவின் காஞ்சன்ரங்கா என்ற வங்க மொழி நாடகத்தின் பாதிப்பில் இதே பெயரில் உருவாக்கப்பட்ட பாலசந்தரின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது. இத்திரைப்படம் 12 திசம்பர் 1968 இல் வெளியிடப்பட்டு, வணிகரீதியாக வெற்றி பெற்றது. பாலச்சந்தர் சிறந்த வசன எழுத்தாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதைப் பெற்றார். இது தெலுங்கில் சம்பரலா ராம்பாபு (1970) என்றும் இந்தியில் லகோன் மே ஏக் (1971) என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டன. கதைஎதிர்நீச்சல் படம் ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒரு ஒட்டுக் குடித்தன குடியிருப்பில் அனாதையான மாது (நாகேஷ்) மாடிப்படிக்கு கீழ் குடியிருந்து கொண்டு அங்கு வசிக்கும் குடித்தனக்காரர்கள் ஏவும் வேலையைச் செய்து, அவர்கள் தரும் உணவால் ஓரளவு தன் பசியாறி வாழ்வதையும் தனது வறுமையிலும் கல்லூரில் படித்து முன்னேறுவதையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது கை. பாலசந்தர் அவர்கள் எல்லோரும் ஏதோ ஒன்றின் மேல் பைத்தியம் என்னும் கருத்தை நினைவூட்டுகிறார். பாடல்கள்இப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.[3][4] "அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா" என்ற பாடல் கருநாடக ராகத்தில் மோகனம்[5] என்ற இராகத்தில் அமைக்கப்பட்டு பிரபலமடைந்தது. 1960களின் பிற்பகுதியில் பி. பி. ஸ்ரீனிவாசின் திரைப்பட வாழ்க்கை வீழ்ச்சியடைந்திருந்தாலும், தி இந்து நாளிதழின் பி. கோலப்பன் "தாமரை கன்னங்கள்" பாடல் "இந்த காலகட்டத்தில் அவரது சிறந்த பாடல்களில் ஒன்று" என்று விவரித்தார்.[6]
மேற்கோள்கள்
நூல் பட்டியல்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia