நிழல் நிஜமாகிறது
நிழல் நிஜமாகிறது (Nizhal Nijamagiradhu) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சரத் பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படமானது மலையாள மொழியில் வெளியான 'அடிமைகள்' திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும். நடிகர்கள்
தயாரிப்புநிழல் நிஜமாகிறது மலையாள மொழியில் வெளியான 'அடிமைகள்' (1969) திரைப்படத்தின் மறுஉருவாக்கமாகும்.[4] இந்தப் படத்திற்கான நகைச்சுவை காட்சிகளை மௌலி எழுதியுள்ளார்.[3] குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷோபா மலையாளம் மற்றும் கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழில் கே. பாலசந்தர் இயக்கத்தில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படம் வெளியாக தாமதமானதால் காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் 1978 பிப்ரவரி 4ல் வெளியான 'அச்சாணி' தான் கதாநாயகியாக வெளிவந்த ஷோபாவின் முதல் தமிழ் படம் என அறியப்படுகிறது.[2][5] சிறு வேடங்களில் நடித்து வந்த சரத் பாபு இப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். பாடல்கள்எம். எஸ். விஸ்வநாதன் அவர்களால் இசையமைக்கப்பட்டு அனைத்து பாடல் வரிகளும் கண்ணதாசன்னால் எழுதப்பட்டுள்ளது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றது.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia