பஞ்சவர்ணக்கிளி (திரைப்படம்)
பஞ்சவர்ணக்கிளி (Panchavarna Kili) 1965 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். முத்துராமன், ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கவிஞர் வாலியும் இயற்றிய இத்திரைப்படத்தின் பாடல்களை டி. எம். சௌந்தரராஜனும் பி. சுசீலாவும் பாடியிருந்தனர். வர்த்தக ரீதியாக திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடியது.[3] விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் பாரதிதாசனும் வாலியும் பாடல்கள் எழுதியிருந்தனர்.[4][5] பாடல்கள்விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி அவர்கள் பாடல்களுக்கு இசை அமைத்தார்கள். பாடல்களுக்கான வரிகள் பாரதிதாசன் மற்றும் வாலி அவர்களால் எழுதப்பட்டது. "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்" என்ற பாடல் திலங் ராகத்தில் பாடப்பட்டது. "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடல் தமிழ் மொழியின் இனிமையைப் போற்றுகிறது. பாடல் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia