கலங்கரை விளக்கம் (திரைப்படம்)
கலங்கரை விளக்கம் (ⓘ) என்பது 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இது வெர்டிகோ (1958) என்ற அமெரிக்க திரைப்படத்தின் பாதிப்பில் உருவானது.[2][3] இப்படம் 28 ஆகத்து 1965 அன்று வெளியானது. கதைவழக்கறிஞரான இரவி (ம.கோ.இரா), தன் நண்பர் மருத்துவர் கோபாலை (வி. கோபாலகிருஷ்ணன்) சந்திக்க மாமல்லபுரம் வருகிறார். சாலையில் நடமாடும் ஒரு பெண்ணான நீலா (சரோஜாதேவி) கலங்கரை விளக்கம் நோக்கி ஓடுகிறாள். பின்னர் நான் நரசிம்ம பல்லவனிடம் செல்கிறேன் என்று தற்கொலைக்கு முயல்கிறாள். அவளை இரவி காப்பாற்றுகிறார். நீலா தன்னை சிவகாமியாகவும் (சிவகாமியின் சபதம் கதை மாந்தர்) இரவியை நரசிம்ம பல்லவனாகவும் நினைக்கிறாள். மனநலம் பாதிக்கபட்டவள் அவள் என்று தெரியவருகிறது. அவளை குணப்படுத்த நண்பர் மருத்துவர் கோபாலின் ஆலோசனையின் பேரில் இரவி நீலாவின் வீட்டிலேயே தங்குகிறார். இதற்கிடையில் நீலாவின் சித்தப்பா நாகராசன் (நம்பியார்) நீலாவையும், தன் சித்தப்பாவையும் கொன்று சொத்துக்களை அபகரிக்க நினைக்கிறார். மனநலம் குணமாகிவரும் நீலா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் தந்தையும் தூக்கமாத்திரை உண்டு இறந்துவிடுகிறார். நீல இறந்த சோகத்தில் உள்ள இரவி நீலாவைப் போன்ற தோற்றம் கொண்ட மல்லிகாவைச் சந்திக்கிறார். மல்லிகாவை திருமணம் செய்துகொண்ட இரவி, நீலா கொல்லப்பட்டதையும் அதற்கு பின் இருந்த நாகராஜின் சதியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. நடிப்பு
பாடல்இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.[1][2] "பல்லவன் பல்லவி" பாடல் நீலாம்பரி இராகத்தில் அமைந்தது.[3][4]
வெளியீடும் வரவேற்பும்கலங்கரை விளக்கம் 28 ஆகத்து 1965 அன்று வெளியானது.[5] எம்ஜியார் பிக்சர்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது.[6] ஸ்போர்ட் அண்ட் பேஸ்டைமின் டி. எம். ராமச்சந்திரன், கே. சங்கரின் இயக்கத்தை "குறிப்பிடத்தக்கதாக இல்லை" என்று விமர்சித்தார், மேலும் "சில இடங்களில் அவரது பணி அநாகரீகமாகவும், அவசர வேலைக்கான அடையாளங்களைக் கொண்டுள்ளன" என்றும் குறிப்பிட்டார்.[7] தம்புவின் ஒளிப்பதிவை, குறிப்பாக மைசூர் மற்றும் மாமல்லபுரத்தின் படப்பிடிப்பை கல்கி பாராட்டியது.[8] இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia