ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி லிமிடெட் அல்லது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி இந்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியாகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வங்கி இந்திய தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கடன்கள் மற்றும் இதர நிதி வசதிகளை வழங்குவதற்காக 1964 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதாகும். இவ்வங்கி இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வங்கியாக இருந்தாலும், இது சாதாரண வணிக வங்கிகளைப் போலவும் செயல்படுகிறது. ஐடிபிஐ வங்கி தற்போது இந்தியாவில் 1513 கிளைகள், துபாயில் ஒரு வெளிநாட்டுக் கிளை, சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங்கில் இரண்டு வெளிநாட்டு மையங்கள் உட்பட மொத்தமாக 1013 மையங்கள் மற்றும் 2713 ஏடிஎம்களுடன் உலக அளவில் 10 ஆவது இடத்தில் இருக்கும் தொழில் மேம்பாட்டு வங்கியாகும்.[3] இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட, இந்திய அரசுக்குச் சொந்தமான 26 வணிக வங்கிகளுள் இதுவும் ஒன்றாகும். மார்ச் 31, 2013 அன்று இவ்வங்கியின் இருப்புநிலை ரூபாய் 3.2 டிரில்லியன் ஒரு மதிப்பீட்டு அளவில் இருந்தது.[4] மேற்கோள்கள்
இவற்றையும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia